சோகம்: டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 10 பேர் பலி

குஜராத்தில் டேங்கர் லாரி மீது கார் மோதல்
குஜராத்தில் டேங்கர் லாரி மீது கார் மோதல்

குஜராத் மாநிலத்தில் டேங்கர் லாரியின் பின்புறம் கார் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலம், கேடா மாவட்டத்தில் அகமதாபாத் - வதோதரா நெடுஞ்சாலையில் நதியாட் பகுதியில் இன்று டேங்கர் லாரி பின்புறத்தில் கார் மோதியது. இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலும், இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த உள்ளூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களும் அங்கு வரவழைக்கப்பட்டு, இறந்தவர்களின் சடலங்கள், பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. விபத்தில் சிக்கிய கார் கடுமையாக சேதமடைந்து உருக்குலைந்துள்ளது.

போலீஸாரின் முதல்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட காரானது, வதோதராவிலிருந்து அகமதாபாத் நோக்கி வந்தபோது, இந்த விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இந்த விபத்து காரணமாக அகமதாபாத் - வதோதரா விரைவு சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விபத்தில் உருக்குலைந்த கார்
விபத்தில் உருக்குலைந்த கார்

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in