படையெடுக்கும் பார்ட் 2 படங்கள்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

படையெடுக்கும் பார்ட் 2 படங்கள்... எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

ஒரு படம் வெற்றிபெற்றால் அதன் இரண்டாம் பாகத்திற்கான லீட் வைத்து ‘பார்ட்2’ எடுக்கும் கலாச்சாரம் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகரித்து வருகிறது. அப்படி ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் பார்ட் 2 படங்கள் என்னென்ன என்பது பற்றி இங்குப் பார்க்கலாம்.

’இந்தியன்2’: 

ஷங்கர் -கமல்ஹாசன் கூட்டணியில் 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. ஊழல், லஞ்சம் என நாட்டில் நடக்கும் குற்றங்களை களையெடுப்பவர் தான் இந்தியன் தாத்தா. படம் வெளியாகி 27ஆண்டுகள் கழித்து இதன் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். பல கட்ட பிரச்சினைகளைக் கடந்து படம் இந்த வருடம் ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது.

’விடுதலை2’:

கதையின் நாயகனாக சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘விடுதலை’. வெற்றிமாறன் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என முன்பே அறிவித்துவிட்டார்கள். முதல் பாகம் வெளியாகி ஓராண்டு ஆகியிருந்தாலும் இரண்டாம் பாகத்திற்கான பணிகள் இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது. விரைவில் வெளியீட்டுத் தேதியை படக்குழு அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

’கைதி2’:

’மாநகரம்’ படத்திற்குப் பின்பு தனது இரண்டாம் படமான ‘கைதி’ மூலம் திரையுலகில் கவனம் ஈர்த்தவர் லோகேஷ் கனகராஜ். ’கைதி’ இரண்டாம் பாகம் வரும் என அறிவித்தப் பின்னர், கடந்த வருடமே படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், இந்த வருடம் நிச்சயம் தொடங்கும் என கூறியிருக்கிறார் கார்த்தி. லோகேஷ் இப்போது ரஜினியின் ‘தலைவர் 171’ படத்தில் பிஸி!

’சார்பட்டா பரம்பரை2’:

மெட்ராஸ் மாகாணத்தில் பாக்ஸிங் கலையை மையமாகக் கொண்டு வெளியான படம்தான் ‘சார்பட்டா பரம்பரை’. இரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2021-ல் இந்தப் படம் வெளியானது. கொரோனா காலம் என்பதால் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ஆர்யா, பசுபதி உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகத்தையும் அறிவித்து உள்ளது படக்குழு.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in