பிரபல நடிகர் மீது குற்றச்சாட்டு... முதல்வரிடம் கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட இளம்பெண்!

ரவி கிஷன்
ரவி கிஷன்

நடிகர், எம்பி ரவி கிஷன் மீது அவரது இரண்டாவது மனைவி என சொல்லிக்கொள்ளும் அபர்ணா என்ற பெண் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அவர் தனது மகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அபர்ணாவின் மகள் வீடியோ மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

பாலிவுட் நடிகர், எம்பி ரவி கிஷன் மீது அவரது இரண்டாவது மனைவி என சொல்லிக்கொள்ளும் அபர்ணா என்ற பெண் குற்றம் சாட்டியுள்ளார். முன்னதாக, இந்தப் பிரச்சினைகளுக்காக செய்தியாளர்களை சந்தித்த அவர், ”என் மகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அவளுக்கு உரிய உரிமை வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பம். இதைப்பார்த்து ரவி கிஷன் ஒத்துழைக்கவில்லை என்றால், நான் கண்டிப்பாக நீதிமன்றத்திற்கும் செல்வேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும், “அவர் எங்கள் மகளை சட்டப்படி ஏற்க உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உதவி செய்ய வேண்டும். ரவி கிஷனை 1995ல் சந்தித்தேன். அடுத்த ஆண்டே எங்களுக்கு மும்பையில் குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் நடந்தது. எல்லாம் நன்றாக போய்க் கொண்டிருந்தது. கடந்த ஆண்டு வரை என்னுடன் தொடர்பில் இருந்தார் ரவி கிஷன்.

அதன் பிறகு பேசுவது இல்லை. மகள் ஷெனோவாவுக்காக காவல் நிலையத்தில அவர் மேல் புகார் கொடுக்கவில்லை” என்றார். இந்தப் பிரச்சினைத் தொடர்பாகதான் மகள் ஷெனோவா முதல்வர் யோகி ஆதித்தியநாத்துக்கு கோரிக்கை வைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “வணக்கம் யோகிஜி! நான் உங்கள் எம்பி ரவி கிஷனின் மகள். இதற்கான உண்மையை ஆதாரத்துடன் நிரூபிக்க விரும்புகிறேன். இதற்காக நீங்கள் எனக்கும் என் அம்மாவுக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். உண்மையை தெரிந்து கொண்டு நீங்கள் முடிவெடுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in