பரபரப்பு... நடிகை சாயா சிங் வீட்டில் கொள்ளையடித்த பெண் கைது!

நடிகை சாயா சிங்
நடிகை சாயா சிங்

நடிகை சாயா சிங் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக அவரது வீட்டின் வேலைக்கார பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் நடிகை சாயா சிங்(43). கடந்த 2003-ம் ஆண்டு தமிழில் நடிகர் தனுஷ் நடித்த 'திருடா திருடி' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான சாயா சிங் கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னட சின்னத் தொடர்களில் நடித்து வருகிறார்.

நடிகை சாயா சிங்
நடிகை சாயா சிங்

சாயா சிங்கின் குடும்பம் பல ஆண்டுகளாக பெங்களூரில்உள்ள பசவேஷ்வர் நகரில் வசித்து வருகிறது. சாயா சிங் தற்போது ‘அமிர்தரே’ என்ற கன்னட சீரியலில் நடித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரவுள்ள சிவராஜ் குமாரின் ‘பைரதி ரங்கல்’ படத்திலும் சாயா சிங் நடித்துள்ளார். இவரது தாய் சாமனலதா வீட்டில் 66 கிராம் தங்க நகைகள், 150 கிரராம் வெள்ளி நகைகள் உள்பட பல லட்ச ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டது.

இதுகுறித்து பசவேஷ்வர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது சாயா சிங் வீட்டில் வேலை செய்து வந்த உஷா என்ற வேலைக்கார பெண், நகைகளைத் திருடியது தெரிய வந்தது.

அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். வேலை செய்த நேரங்களில் கொஞ்சம், கொஞ்சமாக அவர் நகைகளைத் திருடியது தெரிய வந்தது. இந்த கொள்ளைத் தொடர்பாக போலீஸார், உஷாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in