இமானின் முதல் மனைவி
இமானின் முதல் மனைவி

சிவகார்த்திகேயன் மீது ஏன் துரோகப் பட்டம்? இமானின் முதல் மனைவி அதிர்ச்சி தகவல்

நடிகர் சிவகார்த்திகேயன் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம் என்று இசையமைப்பாளர் இமான் கூறிய குற்றச்சாட்டுக்கு அவரது முதல் மனைவி அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

இசையமைப்பாளரான டி.இமான் அண்மையில் அளித்தப் பேட்டியில், "சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. அதனால் இனி வரும் காலங்களில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது. ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது" என்று கூறியிருந்தார்.

சிவகார்த்திகேயனுடன் இமான்
சிவகார்த்திகேயனுடன் இமான்

இதன் பிறகு இமான் விவாகரத்திற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்தநிலையில், சிவகார்த்திகேயன் மீதான குற்றச்சாட்டுக்கு குறித்து இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் கூறுகையில், "சிவகார்த்திகேயனுக்கும் இமானுக்கும் நல்ல நட்பு உண்டு. எங்களுக்கு விவாகரத்து நடக்கக்கூடாதுன்னு பல முயற்சிகளை எடுத்தார். இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் பண்ணவில்லை. அது இமானுக்கு பிடிக்கவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்னாடி பெண்ணையெல்லாம் பார்த்து வைத்துவிட்டுதான், இமான் எனக்கு விவாகரத்தே கொடுத்தார். நான் முடியாதுன்னு சொன்னதுக்கு, அரசியல்வாதிகளை வைத்து 'உங்கப்பாவைக் கொன்னுடுவோம்'னு மிரட்டல் எல்லாம் கொடுத்து 46 நாட்களிலேயே விவாகரத்தும் வாங்கினார். இப்போ, இமானுக்கு பட வாய்ப்புகள் சரியாக இல்லை. அதனால்தான், இப்படியெல்லாம் பேசி பட வாய்ப்புகளை பிடிக்க நினைக்கிறார்" என்று தெரிவித்தார்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in