வேகமாக பரவும் நடிகர் விஜய் சேதுபதியின் வீடியோ... சாதி, மத அரசியல்வாதிகள் மீது சாடல்!

நடிகர் விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி

சிந்திச்சு ஓட்டுப்போடுங்க மக்களே, என நடிகர் விஜய் சேதுபதி பேசிய பழைய வீடியோ தற்போது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் வரும் ஜூன் மாதம் 1-ம் தேதி வரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. இதையடுத்து, நாளை (மார்ச்.20) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 27-ம் தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். வருகிற 28-ம் தேதி மனு பரிசீலனையும், ஏப்ரல் 19-ல் தோ்தலும் நடைபெற உள்ளது.

இதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் பணியை தொடங்கியுள்ள நிலையில், சிலர் கூட்டணி உள்ளிட்ட முக்கிய பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டுள்ளனர். இதில் முக்கிய கட்சிகள் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியின் பழைய விடியோ ஒன்று இன்று வைரலாகி வருகிறது. அதில், விஜய் சேதுபதி, “அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே தயவு செய்து சிந்தித்து வாக்களியுங்கள். வாக்களிப்பது மிக முக்கியம். எப்போதும், நம் ஊருக்கு ஒரு பிரச்சினை, நம் மாநிலத்துக்குப் பிரச்சினை என்பவர்களுடன் சேருங்கள். நம் சாதிக்கு, மதத்திற்கு ஒரு பிரச்சினை என்பவர்களிடம் ஒருபோதும் சேராதீர்கள். அப்படி சொல்பவர்கள் பாதுகாப்பாக வீட்டில் இருப்பார்கள். நாம்தான் மாட்டிக்கொள்வோம்” எனக் கூறியுள்ளார். தற்போது, இந்த விடியோவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இதேபோல் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில், ஏப்ரல் ஒன்றாம் தேதி முட்டாள் தினத்தை குறித்தும், தேர்தல் குறித்தும், போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஏப்ரல் 1-ம் தேதி அன்று யாராவது உங்களை ஏமாற்றினால், அன்றைய தினம் முட்டாள் ஆகலாம். ஆனால் ஏப்ரல் 19-ம் தேதி முட்டாள் நீங்களாகினால், அடுத்த 5 வருடங்களுக்கு முட்டாளாகவே இருக்க வேண்டும் என்ற போஸ்டர் வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


ஷாக்... நடுக்கடலில் விழுந்து நொறுங்கிய இந்திய கடற்படை விமானம்!

விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை... பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

நள்ளிரவு ஒரு மணிக்கு பொங்கல்...  50 ஆடுகளை வெட்டி 3,000 ஆண்களுக்கு விருந்து!

பிரேமலதா விஜயகாந்த் மீது பாய்ந்தது வழக்கு...தேர்தல் விதிமுறை மீறியதாக அதிரடி!

வனவிலங்குகளுடன் செல்ஃபி எடுக்கப் போறீங்களா?... 7 ஆண்டு சிறை உறுதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in