தளபதியின் ஒற்றை திரைப்படத்துடன் மோதிய 2 தல படங்கள்... வசூலில் சொல்லி அடிக்கும் கில்லி!

அஜித்- விஜய்
அஜித்- விஜய்

விஜய் - அஜித் திரைப்படங்களின் ரீ-ரிலீஸ் காண்டத்தில் வென்றது யார் என்பதுதான் சமூக ஊடகங்களில் இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலான பெரும் விவாதமாக உள்ளது.

கோடம்பாக்க சினிமாவை ரீ-ரிலீஸ் மோகம் பிடித்தாட்டுகிறது. இந்த வகையில் பல படங்கள் வரிசையாக வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றன. யூடியூப், ஓடிடி தளங்கள், தொலைக்காட்சிகள் என ஏராளமான வாய்ப்புகள் இருந்தபோதும், அபிமான நட்சத்திரத்தின் வெற்றி திரைப்படத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் குவிந்தும் வருகின்றனர்.

தீனா - அஜீத்
தீனா - அஜீத்

அப்படி வெளியாகி வெற்றி கண்ட திரைப்படங்கள் மத்தியில், ரீ-ரிலீஸ் ஆன தடயமின்றி பல படங்கள் வசூல் மற்றும் வரவேற்பை இழந்திருக்கின்றன. இந்த சூழலில் விஜய் - அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்துக்கு வழி செய்யும் வகையில் படங்கள் வெளியாயின. அவற்றில் விஜய்யின் கில்லி திரைப்படம் ஏகோபித்த வசூலைப் பெற, எதிர்தரப்பில் வெளியான அஜித்தின் 2 திரைப்படங்கள் ரீ-ரிலீஸில் நமுத்துப்போனதாக விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.

அஜித்தின் தீனா, பில்லா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாயின. தீனா திரைப்படம் அஜித்துக்கு ’தல’ என பெயர் வாங்கி கொடுத்த பெருமைக்குரியது. அஜித்தின் ஆக்‌ஷன் அவதாரத்துக்கு இணையாக, சென்டிமென்ட் மற்றும் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவும் தீனா பேசப்பட்டது. அடுத்தபடியாக பில்லா திரைப்படம், அஜித்தின் ஸ்டைலிஷ் அவதாரத்தை முன்னிறுத்தியது. இந்த 2 படங்களும் ஏனோ ரீ-ரிலீஸில் சோபிக்கவில்லை. இவற்றுடன் வெளிநாடுகளில் மட்டுமே வெளியான மங்காத்தா திரைப்படம் சொல்லும்படியான வரவேற்பை பெறவில்லையாம்.

கில்லி - விஜய்
கில்லி - விஜய்

மாறாக விஜயின் ஒற்றை ரீ-ரிலீஸாக வெளியான கில்லி திரைப்படம், வசூலிலும், வரவேற்பிலும் சொல்லியடித்து வருகிறது. பலமுறை பார்த்து ரசித்த திரைப்படம் என்றபோதும் கில்லியை காண ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகின்றனர். ரசிகர்களுக்கு அப்பால் பொதுவான சினிமா ரசிகர்களும் கில்லியை கொண்டாடி வருகின்றனர். இதனால், வசூலிலும் கில்லி சாதனை படைத்து வருகிறது. தீனா, பில்லா ஆகிய படங்கள் தலா ரூ1 கோடியை இன்னமும் தொடவில்லையாம். ஆனால் விஜயின் கில்லி வெற்றிகரமாக ரூ8 கோடியை தாண்டியிருக்கிறது. இதனையொட்டி விஜய் - அஜித் ரசிகர்களுக்கு இடையிலான மோதலும், விவாதங்களும் சமூக ஊடகங்களில் சூடு பிடித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in