உங்களுக்கு ஓட்டு இல்லை... ஏமாற்றத்துடன் திரும்பிய நடிகர் சூரி வீடியோ வெளியிட்டு வேதனை!

நடிகர் சூரி
நடிகர் சூரி

வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் நடிகர் சூரி திரும்பினார். என்றபோதும், “மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் சினிமா பிரபலங்களும் வாக்களித்து தங்களுடையை ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். நடிகர்கள் விஜய், அஜித், ரஜினி, சூர்யா, பிரபு, விஜய் ஆண்டனி, கார்த்தி, வடிவேலு, இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றி மாறன், சுந்தர்.சி, நடிகைகள் குஷ்பு, ராதிகா, த்ரிஷா, ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் வரிசையில் நின்று வாக்களித்தனர். மேலும், தேர்தலில் வாக்களித்தது தொடர்பான புகைப்படங்களை அவர்கள் தங்களுடைய சமூகவலைதள பக்கங்களில் வெளியிட்டு, அனைவரும் வாக்களிக்கும்படியும் கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

விஜய்
விஜய்

இந்நிலையில், நடிகர் சூரி வாக்களிப்பதற்காக தனது மனைவியுடன் சென்னையில் உள்ள வாக்குச் சாவடிக்கு சென்றார். ஆனால், வாக்காளர் பட்டியலில் சூரி பெயர் இல்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சிடைந்த அவர், வாக்களிக்க முடியாமல் திரும்பினார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த வீடியோவில், “மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வந்தேன். வாக்காளர் பட்டியலில் எனது மனைவி பெயர் இருந்தபோதிலும், எனது பெயர் விடுபட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். ஜனநாயக கடமையை ஆற்ற வந்தேன். ஆனால், வாக்களிக்க முடியாமல் போனதால் மனவேதனையாக இருக்கிறது. எப்படி என்னுடைய பெயர் விடுபட்டது என்று தெரியவில்லை. இருந்த போதும் மக்களவைத் தேர்தலில் அனைவரும் 100 சதவீதம் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்” என்று சூரி கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in