தமிழக அரசு நோட்டீஸ் எதிரொலி! சங்கத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியன் திடீர் விலகல்!

திருப்பூர் சுப்பிரமணியன்
திருப்பூர் சுப்பிரமணியன்

தமிழக அரசு நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியன் திடீரென விலகியுள்ளார்.

தமிழகத்தில் புதிய படங்கள் வெளியாகும்போது அரசு அனுமதித்த நேரங்களில் மட்டுமே சிறப்புக் காட்சிகளைத் திரையிட வேண்டும். அதற்காக அரசுக்கு விண்ணப்பித்து அனுமதியைப் பெற வேண்டும். அப்படித்தான் கடந்த மாதம் வெளியான 'லியோ', கடந்த வாரம் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான்' ஆகிய படங்கள் அனுமதி பெற்று சிறப்புக் காட்சிகளை நடத்தினார்கள்.

இந்நிலையில் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத்தின் தலைவராக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியத்திற்குச் சொந்தமான திருப்பூர் சக்தி சினிமாஸ் திரையரங்கில் சல்மான் கான் நடித்த 'டைகர் 3' படத்திற்கு காலை 7 மணிக்கும், இரவு 11.50 மணிக்கும் கடந்த இரண்டு நாட்களில் சிறப்புக் காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அது குறித்த 'ஸ்கிரீன் ஷாட்'கள் சமூக வலைத்தளங்களில் பரவின. இதையடுத்து உரிய அனுமதியின்றி 6 காட்சிகளைத் திரையிட்ட அத்தியேட்டருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியன் திடீரென விலகியுள்ளார். இந்தி படத்திற்கு சிறப்பு காட்சி உத்தரவு பொருந்தாது என்று கருதி ஒளிபரப்பானது என்று கூறியுள்ள திருப்பூர் சுப்பிரமணியன், மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் பொறுப்பில் இருந்தும் விலகியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in