பிரபல இயக்குநருக்கு குண்டர்கள் மிரட்டல்... போலீஸில் பரபரப்பு புகார்!

 ஜோஜு ஜார்ஜ்
ஜோஜு ஜார்ஜ்

பிரபல மலையாள இயக்குநரான ஜோஜூ ஜார்ஜூக்கு குண்டர்கள் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருவதாக அவர் போலீஸில் புகார் தெரிவித்துள்ளார். இது மலையாளத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 ஜோஜு ஜார்ஜ்
ஜோஜு ஜார்ஜ்

மலையாளத்தின் பிரபல நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வருபவர் ஜோஜூ ஜார்ஜ். 'ஜோசப்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தமிழில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கிய 'ஜெகமே தந்திரம்' படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பாராட்டைப் பெற்ற ‘இரட்ட’ திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில், தனக்கு கொலை மிரட்டல்கள் வந்துள்ளதாகப் போலீஸில் இவர் கொடுத்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத ஜீப் ரேஸில் ஜோஜு ஜார்ஜ்
சட்டவிரோத ஜீப் ரேஸில் ஜோஜு ஜார்ஜ்

ஜோஜூ ஜார்ஜ் ‘பனி’ என்ற படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகவுள்ளார். இந்தப் படத்திற்கு வேணு ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புத் தளத்தில் வேணு ஜோஜூவிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதால் இருவருக்கும் அடிதடி ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால், ஆத்திரமடைந்து ஜோஜூ படத்தில் இருந்து அவரை நீக்கிவிட்டார். இதனால், வேணு குண்டர்கள் மூலம் தனக்கு மிரட்டல் விடுவதாக ஜோஜூ போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

இதற்கு முன்பு, மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜின் மீது சட்டவிரோத ஜீப் ரேஸில் கலந்துகொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


HBD Shalini Ajith | அஜித் காட்டிய அக்கறை... வாழ்க்கையை ‘அமர்க்களமாய்’ மாற்றிய சினிமா!

துறைமுகத்தில் 60 படகுகள் எரிந்து நாசம்; கதறும் மீனவர்கள்!

1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த கல்வெட்டுக்கள்... அத்தாளநல்லூர் ஆய்வில் கண்டுபிடிப்பு!

ஐசியுவில் விஜயகாந்த்... என்ன சொல்கிறது மருத்துவமனை நிர்வாகம்?

பிக் பாஸில் மீண்டும் 3 வைல்ட் கார்டு என்ட்ரி... யார் அந்த மூன்று பேர்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in