நிவேதிதா- சுரேந்தர்
நிவேதிதா- சுரேந்தர்

மரியாதைக் குறைவான கேள்விகளை தவிர்த்துவிடுங்கள்... மறுமணத்துக்கு தயாராகும் சீரியல் நடிகை கெஞ்சல்!

“எனக்கு விவாகரத்தாகி மூன்று வருடங்கள் ஆகி விட்டது. எனது தனிப்பட்ட வாழ்வுக்கு மதிப்புக் கொடுங்கள். மரியாதைக் குறைவான கேள்விகளைக் கேட்காதீர்கள்” என சீரியல் நடிகை நிவேதிதா கெஞ்சிக் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிவேதிதா- சுரேந்தர்...
நிவேதிதா- சுரேந்தர்...

சினிமாவிலும் சின்னத்திரையிலும் ஜொலிக்கும் பலரும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால், சிறிது காலத்திலேயே கருத்து வேறுபாடுகளால் பிரிந்து விடுகின்றனர். அப்படி பிரிந்துவிட்டு, புதிய வாழ்க்கைக்குள் நுழையும்போது இணைய வெளியில் ரசிகர்களிடம் இருந்து அவர்கள் எதிர்கொள்ளும் கேள்விகள் பல நேரங்களில் அவர்களை சங்கடப்படுத்தும் விதமாகவும் அமைந்து விடுகிறது. அப்படியான கேள்விகளுக்குத்தான் நடிகை நிவேதிதா பதில் கொடுத்துள்ளார்.

’வாணி ராணி’, ‘கல்யாணப் பரிசு’, ’திருமகள்’, ‘சுந்தரி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தவர் நடிகை நிவேதிதா. இவர் ‘மகராசி’ சீரியலில் நடித்த போது தன்னுடன் நடித்த ஆர்யன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். விவாகரத்து ஆகி மூன்று வருடங்கள் கடந்த நிலையில் நிவேதிதா தற்போது புது வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ளார்.

’திருமகள்’ சீரியலில் நிவேதிதா நடித்த போது, அதில் கதாநாயகனாக நடித்த சுரேந்தர் என்பவரை காதலித்துள்ளார். இந்த ஜோடி விரைவில் திருமணம் செய்ய இருக்கிறது. இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இந்த விஷயத்தை இருவரும் உறுதிப்படுத்தியுள்ளனர். இப்படியான சூழ்நிலையில்தான், ரசிகர்கள் நிவேதிதாவின் இரண்டாவது திருமணம் குறித்து கேள்விகள் எழுப்பியுள்ளனர். இதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார்.

அதில், “எனக்கு விவாகரத்து ஆகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது புது வாழ்வில் அடியெடுத்து வைக்கப் போகிறேன். நீங்கள் என்னிடம் கேட்கும் கேள்விகளை வைத்து உங்கள் ஆர்வத்தைப் புரிந்து கொள்கிறேன். ஆனால், இதுபோன்ற சமயத்தில் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு நீங்கள் மதிப்பு கொடுக்க வேண்டும். மரியாதைக் குறைவான கேள்விகளைக் கேட்பதைத் தவிர்த்துவிட்டு உங்கள் அன்பையும் ஆதரவையும் கொடுங்கள்” எனக் கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழக அமைச்சர்கள் மீதான வழக்குகள்: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று விசாரிக்கிறார்!

இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது... தமிழக மீனவர்கள் 19 பேர் கைது!

8-ம் வகுப்பு படித்தவர்களுக்கு சுகாதாரத்துறையில் வேலை: பிப்.22 வரை விண்ணப்பிக்கலாம்!

நடிப்பை உதறித் தள்ளி புத்த மதத்தைத் தழுவிய நடிகை... ரசிகர்கள் அதிர்ச்சி!

கணவரைப் பிரிந்தார் சூர்யா பட நடிகை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in