மகன் கேட்ட அந்தக் கேள்வி... சினிமாவை உதறிய நெப்போலியன்!

நெப்போலியன்
நெப்போலியன்
Updated on
2 min read

மகன் கேட்ட அந்த ஒரு கேள்வியால் சினிமா, அரசியல் என அனைத்தையும் உதறிவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகியுள்ளார் நடிகர் நெப்போலியன். அது என்ன கேள்வி என்பது குறித்தும் அவர் பகிர்ந்துள்ளார்.

நடிகர் நெப்போலியன்
நடிகர் நெப்போலியன்

`புது நெல்லு புது நாத்து’, ‘எட்டுப்பட்டி ராசா’, ‘சீவலப்பேரி பாண்டி’ என கதாநாயகனாகவும் வில்லனாகவும் அசத்தியவர் நடிகர் நெப்போலியன். சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் இவர் தடம் பதித்தார். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்று எம்பி-யாகவும் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இப்படி சினிமா, அரசியல் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்து வந்தவர் திடீரென இரண்டை விட்டும் விலகி அமெரிக்காவில் செட்டில் ஆனார். அங்கு சொகுசு பங்களா ஒன்றைக் கட்டியவர், ஐடி கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நெப்போலியனின் 60-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் நடிகைகள் குஷ்பு, மீனா உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டதால் அந்த நிகழ்வே களைகட்டியது.

குடும்பத்துடன் நெப்போலியன்...
குடும்பத்துடன் நெப்போலியன்...

இந்த நிலையில், தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமாவை விட்டு தான் ஒதுங்க என்ன காரணம் என்பது குறித்து நெப்போலியன் மனம் திறந்து பேசியிருக்கிறார். “ஒருமுறை எனது மகன் தனுஷ் என்னிடம், ’அப்பா இனிமேலும் நான் இப்படி தனியா தான் இருக்கணுமா... நீ இல்லாமல் இருக்கணுமா?’ என்று கேட்டான். இந்தக் கேள்வி என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. இதன் பிறகுதான் இந்தியாவே வேண்டாம் என்று முடிவு செய்து விட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டேன்” எனப் பேசியுள்ளார் நெப்போலியன். நெப்போலியன் மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் அமெரிக்காவில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...


பொங்கல் பரிசு தொகுப்போடு ரூ.3000 வழங்க வேண்டும் - அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை!

கார் மோதியதில் கால்கள் துண்டான தந்தை... உடல் நசுங்கி 10ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு!

கோடிகளைக் கொட்டி பிரம்மாண்ட பங்களா... பாலிவுட்டை கலக்கும் வில்லன் நடிகர்!

வலுப்பெறும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு!

நிலநடுக்கத்தால் உருக்குலைந்த ஜப்பான்... உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in