சினிமாவை உதறித் தள்ளி வேறு துறையில் சாதிக்கும் பிரபலங்களின் வாரிசுகள்... யார் யார் என்னென்ன பண்றாங்க தெரியுமா?

தந்தை உதயநிதியுடன் இன்பநிதி
தந்தை உதயநிதியுடன் இன்பநிதி
1.

வாரிசு அரசியலும், சினிமாவில் நெப்போட்டிசமும் எப்போதுமே விவாதப் பொருளாகக் கூடிய ஒன்று. தந்தையைப் போலவே அவரது வழியில் அரசியலிலும் சினிமாவிலும் நுழையும் பிரபலங்கள் இந்தத் துறையில் ஏராளாம். ஆனால், என்னதான் தங்களது அப்பா சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் சினிமா வாடையே வேண்டாம் என விட்டு வேறு துறையில் அவர்களது பிள்ளைகள் சாதித்து இருக்கிறார்கள். அவர்கள் யார், என்னென்ன துறையில் ஜொலிக்கிறார்கள் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

2. நடிகர் மாதவன் - மகன் வேதாந்த்:

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிக அறிமுகம் தேவைப்படாதவர் நடிகர் மாதவன். தொண்ணூறுகளில் சாக்லேட் பாயாக வலம் வந்த இவர் தற்போது படங்கள் இயக்கம், பாலிவுட், கோலிவுட் என பயங்கர பிஸி. இவரது மகன் வேதாந்த். அப்பாவைப் போல சினிமாவில் அதிக ஆர்வம் இல்லாத இவர், நீச்சல் துறையில் பல சாதனைகளைப் புரிந்து வருகிறார். குறிப்பாக, கடந்த ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் இவர் ஐந்து தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வாரி குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3. சின்னி ஜெயந்த்- மகன் சுதன் ஜெய்நாராயணன்: 

தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் சின்னி ஜெயந்த். இவரது மகன் சுதன் ஜெய்நாராயணன், தனது தந்தையைப் போல சினிமாவிற்குள் வராமல் திருப்பூரில் சப் கலெக்ட்டராக பணியாற்றி வருகிறார். இந்திய அளவில் நடந்த யுபிஎஸ்சி தேர்வில் இவர் 75-வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

4. தலைவாசல் விஜய்- மகள் ஜெயவீணா:

நகைச்சுவை, குணச்சித்திரம், வில்லத்தனம் என பன்முக கலைஞராக வலம் வரக்கூடியவர் நடிகர் தலைவாசல் விஜய். இவரது மகள் ஜெய வீணா சினிமாத் துறையை விடுத்து நீச்சல் கலைஞராக வலம் வருகிறார். பல தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று வெள்ளி பதக்கங்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5. இயக்குநர் மணி ரத்னம்- மகன் நந்தன்:

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் மணி ரத்னம். இவரது படத்திற்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இவரது மனைவி சுஹாசினியும் நடிகை, இயக்குநர் என பன்முகம் கொண்டவர். ஆனால், இந்த ஜோடியின் ஒரே மகனான நந்தன் சினிமா வாடையே வேண்டாம் என விலகி தற்போது அரசியலில் களம் கண்டுள்ளார். இப்போது நந்தன் சிபிஎம் கட்சியின் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

6. உதயநிதி - மகன் இன்பநிதி:

நடிகராக இருந்த உதயநிதி தற்போது அமைச்சராக வலம் வருகிறார். இவரது மகன் உதயநிதி கால்பந்து விளையாட்டில் கில்லி. தனது தாத்தா, அப்பாவைப் பின்பற்றி, வரும் காலத்தில் இவர் அரசியலுக்கு வருவாரா அல்லது வேறு துறையில் தன்னை முழுமையாகத் தயார்படுத்திக்கொள்வாரா என்பதை காலம் தான் முடிவு செய்யும்.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

x
காமதேனு
kamadenu.hindutamil.in