சிறைக்குப் போனபோது மகாலட்சுமி கேட்ட அந்தக் கேள்வி... கண்ணீர் விட்டு கதறிய ரவீந்தர்!

தயாரிப்பாளர் ரவீந்தர் மனைவி மகாலட்சுமியுடன்.
தயாரிப்பாளர் ரவீந்தர் மனைவி மகாலட்சுமியுடன்.

பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தயாரிப்பாளர் ரவீந்தருக்கு சமீபத்தில் ஜாமீன் கிடைத்தது. வெளியே வந்ததும் கொடுத்துள்ள பேட்டியில் தனது மனைவி குறித்து அவர் பேசியுள்ளார்.

லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனரான தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சுமார் 16 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதன் பேரில் போலீஸார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். தற்போது, பிணைத் தொகை கொடுத்து அவர் ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.

வெளியே வந்ததும் யூடியூப் தளம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தன் மனைவி மகாலட்சுமி குறித்துப் பேசியுள்ளார். ‘என் அம்மாவுக்கு பிறகு மகாலட்சுமி எனக்கு கிடைத்த வரம். என்னிடம் இருந்து மகாலட்சுமியை யாராலும் பிரிக்க முடியாது. மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு கொண்டு செல்லும் போது எப்படி உட்காருவ, எப்படி எந்திருப்ப என மகா கேட்கும் போது நொறுங்கிப் போயிட்டேன்.

நடிகை மகாலட்சுமியுடன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.
நடிகை மகாலட்சுமியுடன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன்.

என் உடல் மற்றவர்கள் உடல் போல அப்படியெல்லாம் ஈடு கொடுக்காது. எவ்வளவோ சொல்லியும் கைது செய்து கொண்டு சென்று விட்டனர். நான் எந்த மோசடியும் செய்யவில்லை ” என்று கண்ணீருடன் பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in