காதலை உறுதி செய்த தனுஷ் பட நடிகை... விரைவில் டும் டும் டும்?

நடிகை ரஜிஷா விஜயன்
நடிகை ரஜிஷா விஜயன்

நடிகை ரஜிஷா விஜயன் தனது காதலை பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். இவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழியும் அதேசமயம், திருமணம் எப்போது என ரசிகர்கள் துளைத்தெடுத்து வருகின்றனர்.

மலையாளத் திரையுலகில் இருந்து தமிழுக்கு மற்றொரு நல்வரவு நடிகை ரஜிஷா விஜயன். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது யதார்த்தமான நடிப்பாலும் அழகாலும் ரசிகர்களை ஈர்த்தார். அடுத்து, சூர்யாவுடன் ‘ஜெய் பீம்’, நடிகர் கார்த்தியுடன் ‘சர்தார்’ ஆகிய படங்களிலும் நடித்தார் ரஜிஷா. தமிழ் மட்டுமல்லாது, மலையாளத்திலும் பெயர் சொல்லும்படியான படங்களில் நடித்து வந்தவர் இப்போது திருமணத்திற்குத் தயாராகி உள்ளார்.

மலையாள சினிமாவில் ஒளிப்பதிவாளராக இருப்பவர் டோபின் தாமஸ். இவரைத் தான் டேட் செய்து வருகிறார் ரஜிஷா. இவரின் பிறந்தநாளன்று எடுத்த புகைப்படங்களை டோபின் பகிர்ந்து, ‘என்னுடைய எல்லாமுமானவள் நீ’ என்று சொல்லி பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார்.

அதேபோல், இப்போது இருவரும் எடுத்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘நாம் இருவரும் இன்னும் நிறையப் பயணம் செய்ய வேண்டும். அன்பு, சிரிப்பு என அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

இதைப் பார்த்துவிட்டு திரைப்பிரபலங்களும் ரசிகர்களும் இந்த ஜோடி காதலை உறுதி செய்துவிட்டது என கமென்ட் செய்து, தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர். ரசிகர்களோ, “உங்களுக்கு திருமணம் எப்போது?” என நச்சரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in