மீண்டும் கெஸ்ட் ரோலில் சூர்யா... லோகேஷ் கனகராஜ் படத்தில் அடுத்த அதிரடி?

லோகேஷ் கனகராஜ்- சூர்யா
லோகேஷ் கனகராஜ்- சூர்யா

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிகர் சூர்யா மீண்டும் ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

படங்கள் இயக்குவது மட்டுமல்லாது தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். ‘உறியடி’ விஜயகுமாரை ஹீரோவாக தேர்வு செய்து அவர் தயாரித்த முதல் திரைப்படமான ‘ஃபைட் கிளப்’ சுமாரான விமர்சனங்களைப் பெற்றது. இதனை அடுத்து அவர் மீண்டும் தயாரிப்பில் களமிறங்கியுள்ளார்.

ராகவா லாரன்ஸ்- லோகேஷ் கனகராஜ்
ராகவா லாரன்ஸ்- லோகேஷ் கனகராஜ்

அவரது திரைக்கதை மற்றும் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் அடுத்தப் படத்தில் நடிப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதனை ’ரெமோ’ படப்புகழ் இயக்குநர் பாக்கியராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

இதற்கு முன்பு, லோகேஷ் இயக்கியிருந்த ‘விக்ரம்’ படத்தில் சூர்யா ‘ரோலக்ஸ்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் சில நிமிடங்களே வந்திருந்தாலும் அந்தப் படத்தில் அவரது காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து மட்டுமே தனிப் படம் உருவாக்கப் போவதாகவும் லோகேஷ் முன்பு சொல்லியிருந்தார்.

’விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் சூர்யா
’விக்ரம்’ படத்தில் ரோலக்ஸ் சூர்யா

இந்த நட்பின் அடிப்படையிலேயே லோகேஷ் தயாரிக்கும் அடுத்தப் படத்தில் ராகவா லாரன்ஸூடன் இணைந்து கெஸ்ட் ரோலில் நடிக்கிறாராம் சூர்யா. இதிலும் ரோலக்ஸாக வருவாரா அல்லது வேறு ஸ்பெஷல் கதாபாத்திரமா எனக் கேட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in