ஹாலிவுட் படத்தில் ‘பிரேமம்’ நாயகி... ‘அரண்மனை4’க்கு போட்டியாக திகில் படத்தில் அசத்தல்!

 ‘டாரட்’ படத்தில் அவந்திகா...
‘டாரட்’ படத்தில் அவந்திகா...

சுந்தர்.சி இயக்கத்தில் திகில் ஜானரில் வெளியாகியுள்ள ’அரண்மனை4’ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது. இதற்குப் போட்டியாக, களத்தில் ‘டாரட்’ என்ற ஹாலிவுட் படமும் வெளியாகி இருக்கிறது. இதில் தான் ’பிரேமம்’ பட நடிகை அவந்திகாவும் நடித்திருக்கிறார்.

இந்த வாரம் திகில் வாரம் என்பதற்கேற்ப தியேட்டர்களை ஹாரர் ஜானர் படங்களே ஆக்கிரமித்துள்ளன. சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ‘அரண்மனை4’ ரசிகர்கள் மத்தியில் பாஸ் மார்க் வாங்கி இருக்க, இன்னொரு பக்கம் ஹாரர் ஜானரில் நேற்று வெளியாகியுள்ள ஹாலிவுட் படம்தான் ‘டாரட்’. 1992-ம் ஆண்டு நிக்கோலஸ் ஆடம் எழுதிய ‘ஹாரர்ஸ்கோப்’ எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 ‘டாரட்’
‘டாரட்’

கல்லூரி நண்பர்கள் குழு ஒன்று, கேளிக்கைக்காகத் தங்கள் டேரோட் கார்டுகளைப் (எதிர்காலத்தை சொல்லும் கார்ட்) படிக்கத் தொடங்குகிறது. விளையாட்டு விபரீதமாகி, அவர்களுக்குக் கிடைக்கும் கார்டின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து அவர்களில் சிலர் இறக்க நேரிடுகிறது.

இதனால் அச்சத்தில் உழலும் உயிர் தப்பியவர்கள், தாங்கள் உயிர் பிழைக்க வேண்டுமென்றால் குழுவாக இணைந்து ஒரு தப்பிக்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று உணர்கிறார்கள். அப்படியான திட்டத்தை உருவாக்கினார்களா... நண்பர்கள் குழுவில் யாரேனும் உயிர் பிழைத்தார்களா இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இந்த ‘டாரட்’.

ஸ்பென்சர் கோஹன் மற்றும் அன்னா ஹல்பெர்க் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் ஹாரியட் ஸ்லேட்டர், அடெய்ன் பிராட்லி, அவந்திகா, வொல்ப்காங் நோவோகிராட்ஸ், ஹம்பர்லி கோன்சலஸ், லார்சன் தாம்சன் மற்றும் ஜேக்கப் படலோன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதில் அவந்திகா 'பிரேமம்', 'ராரண்டோய் வேடுக சுதம்', பவன் கல்யாணின் 'அக்னியாதவாசி' போன்ற தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். சில விளம்பரங்களிலும் இவரைப் பார்த்திருக்கலாம். இவர் ‘பூமிகா’ படம் மூலம் தமிழிலும் நடித்திருக்கிறார்.

அவந்திகா
அவந்திகா

தெலுங்கு, தமிழ் இல்லாது இப்போது தொடர்ச்சியாக ஹாலிவுட் படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் அவந்திகா. 'ஸ்பின்' திரைப்படம் மூலம் ஹாலிவுட்டில் கடந்த 2021-ல் அறிமுகமானார் அவந்திகா. பிறகு ‘சீனியர் இயர்’, ‘மீன் கேர்ள்ஸ்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து அசத்தி வருபவருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

 ‘டாரட்’
‘டாரட்’

‘டாடர்’ ஹாரர் படம் என்பதற்கேற்ப படத்தில், தொழில்நுட்பக் குழு விஎஃப்எக்ஸ் மற்றும் ஒலியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கிறார்கள். அதேபோல, நண்பர்கள் ஒவ்வொருவரும் இறப்பதற்கு முந்தைய திகிலூட்டும் தருணங்களும் முதல் பாதியில் ரசிகர்களை கட்டிப் போடுகிறது.

ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அதுவே அலுத்துவிடுகிறது. நேர்க்கோட்டில் பயணிக்கும் கதையும் எதிர்பார்த்த கிளைமேக்ஸூம் ரசிகர்களை திகிலூட்டத் தவறுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in