நூறாண்டு கடந்த தென்னிந்தியாவின் முதல் திரையரங்கம் இடிப்பு...ரசிகர்கள் சோகம்!

தியேட்டர் டிலைட்...
தியேட்டர் டிலைட்...

கோயம்புத்தூரில் உள்ள நூறாண்டு கடந்த தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான தியேட்டர் டிலைட் இடிக்கப்பட உள்ளது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காலமாற்றத்திற்கு ஏற்றவாறு திரைப்படங்களில் புதிய தொழில்நுட்பம் வளருவதைப் போலவே, திரையரங்குகளும் பார்வையாளர்களுக்கு ஏற்ற மேம்பட்ட வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.

ஆனால், அதற்கு ஈடு கொடுக்க முடியாத திரையரங்குகள் காலப்போக்கில் மாற்றம் அடைவதையும் பார்க்க முடிகிறது. அதன்படி, தென்னிந்தியாவின் முதல் திரையரங்கமான தியேட்டர் டிலைட் இடிக்கப்பட இருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் தென்னிந்திய ரயில்வே ஊழியரான சாமிகண்ணு வின்சென்ட், பிரெஞ்சுகாரரான டூ பாண்ட் என்பவரிடம் இருந்து மவுனப்படங்களை விலைக்கு வாங்கி டெண்ட் கொட்டாய் என்ற முறையில் காட்சிப்படுத்தி வந்தார். 

துணி கூடாரத்தை விட நிரந்தரமாக ஒரு கட்டிடம் கட்டி திரைப்படங்களைக் காட்ட வேண்டும் என்று எண்ணிய சாமிகண்ணு வின்சென்ட் கடந்த 1914-ம் ஆண்டுகோயம்புத்தூரில் தியேட்டர் டிலைட் என்ற திரையரங்கத்தைக் கட்டினார்.

இந்தத் திரையரங்கு இருக்கும் சாலை இன்றளவும் வெரைட்டி ஹால் ரோடு என்றே அழைக்கப்படுகிறது. இந்த டிலைட் தியேட்டர் தென்னிந்தியாவின் முதல் நிரந்தர தியேட்டர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறது. நூற்றாண்டைக் கடந்த தியேட்டரில் தொடர்ந்து திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்தது.

தியேட்டர் டிலைட்...
தியேட்டர் டிலைட்...

வாரம் இரண்டு, மூன்று புதிய திரைப்படங்கள் வந்தாலும், இந்த தியேட்டரில் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த் போன்ற நடிகர்களின் பழைய படங்கள் தான் அதிகளவில் திரையிடப்பட்டு வந்தது. ஆனால், இந்தத் திரையரங்கில் தற்போது போதிய வருமானம் இல்லை என்பதால் இடிக்க முடிவு செய்துள்ளனர்.

கடைசியாக ரஜினி நடித்த ’மனிதன்’ திரைப்படம் திரையிடப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மற்றும் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கான டிலைட் தியேட்டரை இடிக்க உரிமையாளர்கள் முடிவு செய்து அதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. தியேட்டர் இடிக்கப்பட்டு இப்பகுதியில் வணிக வளாகம் ஏற்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது. இந்த விஷயம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in