காதலியைக் கரம் பிடிக்கும் விஜய் மல்லையா மகன்: குவியும் வாழ்த்துகள்!

ஜாஸ்மினுடன்  சித்தார்த் மல்லையா
ஜாஸ்மினுடன் சித்தார்த் மல்லையா

பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா தனது காதலியை திருமண நிச்சயதார்த்தம் செய்துள்ளார். அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவின் பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா. 'பிரம்மநாமன்' உள்பட பல திரைப்படங்களிலும், தொலைக்காட்சிகளிலும் சித்தார்த் நடித்துள்ளார். அத்துடன் ஆன்லைன் வீடியோ தொடரையும் தொகுத்து வழங்குவதுடன் கின்னஸில் சந்தைப்படுத்தல் மேலாளராகவும் இருந்தார்.

இந்த நிலையில், தனது காதலி ஜாஸ்மினுடன் ஹாலோவீன் பார்ட்டியின் போது சித்தார்த் மல்லையா நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களை அவர் இன்ஸ்டா பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.

ஜாஸ்மினுடன்  சித்தார்த் மல்லையா
ஜாஸ்மினுடன் சித்தார்த் மல்லையா

தனது காதலை அவர் சொல்வதையும், அதை ஜாஸ்மின் வெட்கத்துடன் ஏற்றுக் கொள்ளும் புகைப்படத்தையும் சித்தார்த் பகிர்ந்துள்ளார். சித்தார்த் தனது நிச்சயதார்த்த மோதிரத்தை கேமராவில் காட்டும்போது ஜாஸ்மின் கையைப் பிடித்தபடி காணப்படுகிறார். " நீங்கள் இப்போது என்னுடன் நிரந்தரமாக சிக்கிக் கொண்டீர்கள் என்று நினைக்கிறேன். நான் உன்னை காதலிக்கிறேன்" என அதில் பதிவிடுள்ளார்.

இவர்களின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியானதையடுத்து பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in