பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு... முன்னணி நடிகைகள் மத்தியில் கடும் போட்டி!

எம்.எஸ். சுப்புலட்சுமி
எம்.எஸ். சுப்புலட்சுமி

பின்னணிப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாக இருக்கிறது. இதில் நடிக்க முன்னணி நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா, ராஷ்மிகா உள்ளிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இசைக்குடும்பத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமிக்கு இசை மீது ஆர்வம் பிறந்தது ஆச்சரியம் இல்லை. சிறுவயதில் இருந்தே பல இசைக் கச்சேரிகளை செய்து வந்தவர், வளரிளம் பருவத்தில் தனது அம்மாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென்னைக்கு வந்து சினிமாவில் நடிப்பு மற்றும் பாடல் கலையில் மிளிர தொடங்கினார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி
எம்.எஸ். சுப்புலட்சுமி

கர்நாடக சங்கீதத்தில் தேர்ந்தவரான எம்.எஸ். சுப்புலட்சுமி கடந்த 2008ல் காலமானார். தனது கானக்குரலால் காலத்தால் அழியாத முத்திரை பதித்தவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கிறது.

இதனை பிரபல கன்னட தயாரிப்பு நிறுவனம் ஒன்று தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்க நடிகைகள் நயன்தாரா, த்ரிஷா, ராஷ்மிகா ஆகிய மூவரிடமும் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.

நயன்தாரா- த்ரிஷா - ராஷ்மிகா
நயன்தாரா- த்ரிஷா - ராஷ்மிகா

இவர்களில் யார் எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிக்கப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அடுத்த வருடம் வெளியிடத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...


வங்கக்கடலில் புயல் சின்னம்... தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொட்டப் போகிறது கனமழை!

சோகம்... போலீஸ்காரருடன் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

காதலித்ததால் ஆத்திரம்... தங்கையை கோடாரியால் வெட்டிக்கொலை செய்த அண்ணன்கள்

மதுரை எய்ம்ஸ் திட்ட மதிப்பு... ரூ.1,978 கோடியிலிருந்து ரூ.2,021 கோடிகளாக உயர்வு!

உயர் தொழில்நுட்பம் படித்த தமிழர்களைக் குறிவைக்கும் வெளிநாட்டு மோசடிக் கும்பல்... கலெக்டர் எச்சரிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in