சிம்பு டூ நயன்தாரா... வாக்களிக்க தலை காட்டாத பிரபலங்கள்!

சிம்பு டூ நயன்தாரா... வாக்களிக்க தலை காட்டாத பிரபலங்கள்!
1.

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடந்து வரக்கூடிய சூழலில் பொதுமக்களோடு பிரபலங்கள் பலரும் தங்கள் வாக்கினை செலுத்தினர். ஆனால், இந்த பரபரப்புக்கு மத்தியிலும் வாக்களிக்க தலை காட்டாத பிரபலங்கள் யார் யார் என்பதைப் பார்க்கலாம்.

2. நடிகர் சிம்பு:

நடிகர் சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் இன்று காலை சென்னை, தி.நகரில் வாக்களித்தார். நடிகர் விஜய் கூட ரஷ்யாவில் இருந்து 12 மணி நேரம் பயணப்பட்டு வாக்களிக்க வந்தார். அஜித் முதல் நபராக இன்று வாக்களித்தார். இப்படியான சூழ்நிலையில்தான், நடிகர் சிம்பு இன்று வாக்களிக்க வரவில்லை. தனது படப்பிடிப்பிற்காக நடிகர் சிம்பு வெளிநாட்டில் இருப்பதால் வாக்களிக்க வரவில்லை என்கிறது அவரது வட்டாரம்.

3. இயக்குநர் லோகேஷ் கனகராஜ்:

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

’விக்ரம்’, ‘லியோ’ பட இயக்குநர் லோகேஷ் கனகராஜூம் இதுவரை வாக்களித்ததாக தகவல் வெளியாகவில்லை. கோயம்புத்தூரை சேர்ந்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் 171வது கதையில் பிஸி. ஆனால், படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. அப்படி இருக்கும்போது, அவர் வாக்களிக்கவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

4. நடிகை ஜோதிகா:

நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகா

நடிகை ஜோதிகாவின் கணவர் சூர்யா, மாமனார் சிவக்குமார் என குடும்பமே இன்று காலை சென்னை, தி.நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் வாக்களித்தது. சூர்யாவும் “எல்லோரும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும்” என்று கூறிச் சென்றார். ஆனால், ஜோதிகா ஏனோ வரவில்லை. அவர் மும்பையில் இருப்பதும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

5. நடிகை நயன்தாரா: 

நடிகை நயன்தாராவும் இந்த தேர்தலில் வாக்களிக்க வரவில்லை. ‘தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற அரசியல் களம் சார்ந்த படங்களை இயக்கியவர் நயனின் கணவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். வாக்களிப்பது அவசியம் என தனது சமூகவலைதளங்களில் பதிவிட்டார். ஆனால், ஏனோ இந்த ஜோடியும் இந்த தேர்தலை தவிர்த்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#Election2024: ரஜினி முதல் விஜய் வரை... வாக்களித்த பிரபலங்கள் லிஸ்ட்!

கோவையில் பரபரப்பு... திமுக நிர்வாகியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்ற போலீஸார்!

பள்ளியில் பாடம் நடத்தாமல் ஃபேஷியல் செய்த தலைமை ஆசிரியை... வைரலாகும் வீடியோ!

ஜோதிகா மிஸ்ஸிங்... குடும்பத்துடன் வாக்களிக்க வந்த நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி!

பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சியில் ஹை ஸ்பீடு... ஒரு மணி நிலவரப்படி 46 சதவீத வாக்குப் பதிவு!

x
காமதேனு
kamadenu.hindutamil.in