கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'GOAT' படத்தில் இருந்து நேற்று தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக முதல் பாடல் வெளியானது. இந்தப் பாடல் தொடர்பாக நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் ஆன்லைனில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'GOAT' படம் வருகிற செப்டம்பர் 5 அன்று வெளியாகிறது. படத்தின் ரிலீஸ் தேதி லாக் செய்யப்பட்ட நிலையில், படத்திற்கானபுரோமோஷனைப் படக்குழு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், படத்தில் இருந்து முதல் பாடல் ‘விசில் போடு’ நேற்று வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் பாடலை விஜய் பாடியிருந்தார். பார்ட்டி தீமில் உருவாக்கப்பட்ட இந்தப் பாடல் உருவாகி இருந்தது.

இந்த லிரிக்கல் வீடியோவில் இடம்பெற்றிருந்த மது தொடர்பான வார்த்தைகளும் காட்சிகளும்தான் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. விஜய் அரசியலுக்கு வர இருக்கும் இந்த சமயத்தில் இதுபோன்ற விஷயங்கள் படத்தில் இடம்பெற வேண்டுமா எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இப்போது இதற்கெல்லாம் அடுத்த நிலைக்கு சென்று விஜய் மீது டிஜிபி அலுவலத்தில் ஆன்லைன் மூலம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மயிலாப்பூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் இந்தப் புகாரை அளித்திருக்கிறார். இதில், ”நடிகர் விஜய் பிரச்சினையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். இதற்கு முன்பு ‘லியோ’ திரைப்படத்தில் கூட போதைப் பொருளை ஆதரிக்கும் வகையில் பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகி உள்ள விஜய் தனது சொந்த குரலில் பாடியுள்ள பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார்.

’குறிப்பாக பார்ட்டி ஒன்ன தொடங்கட்டுமா?’ என்ற வரியில் தணிகை குழு வாரிய சட்டத்தின் படி போதை பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக வரும் பெரும்பாலான இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால், நடிகர் விஜய் அதை வைக்கவில்லை. ’அதிரடி காட்டட்டுமா? சாம்பயன தான் தொறக்கட்டுமா?’ எனத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் போதை பொருள் மற்றும் ரௌடியிசத்தை ஆதரிக்கும் வகையிலும், ’அதிரடி காட்டட்டுமா’ என்ற வரியும் இடம்பெற்றுள்ளது.

‘மைக்கை கையில் எடுக்கட்டுமா?’ எனத் தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் முறையில் குறிப்பாக சீமான், நடிகர் கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களைச் சுட்டிக்காட்டும் வகையிலும், ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது. ’இடி இடிச்சா என் வாய்ஸ் தான், வெடி வெடிச்சா என் பாய்ஸ் தான்’ நடிகர் விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொனியில் இந்த வரிகளை வைத்துள்ளார் விஜய்.

விஜய், வெங்கட்பிரபு
விஜய், வெங்கட்பிரபு

மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்க வேண்டிய விஜய், குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்ணும் காணாமல் தன் படத்திற்காக வாய் திறக்கும் நடிகராக உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மை! ரத்தம் பற்றும் விசில் போடு நண்பா இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் நடிகர் விஜய் செயல்பட்டு வருகிறார்” எனவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

விஜயின் ‘லியோ’ படத்தில் இருந்து வெளியான ‘நான் ரெடிதான்...’ பாடலுக்கும் இதே போன்று சர்ச்சை எழுந்தது. பின்பு அதில் மது, போதைப் பொருட்கள் வரும் இடத்தில் எச்சரிக்கை வாசகம் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...   

இன்றும், நாளையும்.... சென்னை வானிலை மையம் தந்த சர்ப்ரைஸ்!

பரபரப்பு... அமைச்சர் உதயநிதி வந்த ஹெலிகாப்டரை சுற்றி வளைத்த தேர்தல் பறக்கும் படை!

கும்பிடுவது போல கையை வைத்து கொண்டு தானே காருக்குள் இருந்தேன்... போலீஸாருடன் அண்ணாமலை வாக்குவாதம்!

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளால் பயங்கரத் தாக்குதல்... வெள்ளை மாளிகை முக்கிய அறிவிப்பு!

என்னைப் பிரச்சாரம் செய்ய விடாமல் தடுக்கிறார்கள்... பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in