நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார்... தொடர் இழப்புகளால் திரைத்துறையினர் சோகம்!

நடிகர் விஸ்வேஷ்வர ராவ்
நடிகர் விஸ்வேஷ்வர ராவ்

நகைச்சுவை நடிகர் விஸ்வேஷ்வர ராவ் இன்று காலமானார். நடிகர்கள் சேஷூ, டேனியல் பாலாஜி இப்போது விஸ்வேஷ்வர ராவ் என அடுத்தடுத்து நடிகர்களின் மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராகப் புகழ் பெற்றவர் நடிகர் விஸ்வேஷ்வர ராவ் (62). இன்று அதிகாலை இவர் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். இவரது இறுதிச் சடங்குகள் நாளை நடைபெற இருக்கும் நிலையில், சிறுசேரியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை நடிகர் சேஷூ, டேனியல் பாலாஜி, இப்போது விஸ்வேஷ்வர ராவ் என தொடர்ச்சியாக நடிகர்களின் இறப்பு ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட விஸ்வேஷ்வர ராவ், சினிமாவில் மட்டுமல்லாது சீரியல்களிலும் நடித்து வந்தார். ஆந்திராவை பூர்விகமாகக் கொண்ட இவர் தனது சினிமா வாழ்க்கையை எழுத்தாளர் மற்றும் இயக்குநராகத் தொடங்கினார்.

விஸ்வேஸ்வர ராவ் 1979-ம் ஆண்டு ’நாக்னா சத்யம்’ படத்திற்காகவும், 1980-ல், ’ஹரிச்சந்துருடு’ படத்திற்காகவும் சிறந்த திரைப்படத்திற்கான (தெலுங்கு) இரண்டு தேசிய திரைப்பட விருதுகளை வென்றார். விஸ்வேஸ்வர ராவ் தெலுங்கு திரைப்படங்களில் பல நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...    

அறை எண் 2-ல் அடைக்கப்பட்டார் அர்விந்த் கேஜ்ரிவால்... திகார் சிறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?

உஷார்... இந்த வருடம் கோடை வெயில் அதிகரிக்கும்... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அதிகாலையில் கோர விபத்து... ஆம்னி பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி இருவர் உயிரிழப்பு!

பாஜகவில் இணைகிறாரா டி.ஆர். பாலுவின் மகள்?.. திமுகவை திக்குமுக்காடச் செய்ய பலே திட்டம்!

தொடரும் ஈ.டி அதிரடி... திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்.பியின் ரூ.29 கோடி சொத்துகள் முடக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in