நடிகை கங்கனாவுக்காக பிரச்சாரம் செய்ய ரெடி... முன்னாள் காதலனின் தந்தை பேட்டி!

நடிகை கங்கனா ரனாவத்
நடிகை கங்கனா ரனாவத்

இமாச்சல பிரதேசம், மக்களவைத் தேர்தலுக்கான மண்டி தொகுதியில் நடிகை கங்கனா பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்காக பிரச்சாரம் செய்ய தான் தயாராக இருப்பதாக நடிகை கங்கனாவின் முன்னாள் காதலரின் தந்தை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலம் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கங்கனா, தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் பரபரப்பாக இருக்கிறார். இவரது பிரச்சாரப் பேச்சுகள் பெரும்பாலும் நெட்டிசன்கள் மத்தியில் கேலிப் பொருளாகியுள்ளது.

இந்நிலையில், நடிகை கங்கனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய தான் தயாராக இருப்பதாக நடிகர் சேகர் சுமன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் கங்கனா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து சேகர் சுமன் நேற்று இந்தக் கட்சியில் இணைந்து பரபரப்பைக் கிளப்பினார். அப்போது அவரிடம், ’கங்கனாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வீர்களா?’ என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “கங்கனா என்னை அழைத்தால், நிச்சயம் அவருக்காக நான் பிரச்சாரம் செய்வதில் எந்தவிதமான தயக்கமும் இல்லை. அது என்னுடைய கடமை. இன்னும் சொல்லப்போனால் என் உரிமையும் கூட” என்றார். சேகர் சுமனின் மகன் அத்யானுடன் கங்கனா முன்பு டேட்டிங் செய்து வந்ததாக செய்திகள் வெளியானது.

கங்கனா- அத்யான்
கங்கனா- அத்யான்

இருவரும் 2008-ல் மோஹித் சூரியின் ’ராஸ் - தி மிஸ்டரி கன்டினியூவஸ்’ படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். ஒரு வருடம் டேட்டிங் செய்த இந்த ஜோடி பின்பு பிரிந்தது. இப்போது வெளிநாட்டு மாடல் ஒருவரை கங்கனா காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் செய்திகள் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in