பெண்களே உஷார்... மருத்துவமனை பெட்டில் இருந்து அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட நடிகை!

ஷமிதா ஷெட்டி
ஷமிதா ஷெட்டி

நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமிதா ஷெட்டி மருத்துவமனையில் இருந்து அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கை ஷமிதா ஷெட்டி. இவரும் பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். இப்படியான சூழ்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் கர்ப்பப்பையைச் சுற்றி வளர்ந்துள்ள எண்டோமெட்ரியஸ் திசு வளர்ச்சிக்காக அறுவை சிகிச்சை செய்யப் போவதாகக் கூறியுள்ளார்.

இதுகுறித்து மருத்துமனை படுக்கையில் இருந்து அறுவை சிகிச்சைக்கு முன்பு வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

அதில், “பெண்களே! தயவுசெய்து எண்டோமெட்ரியஸ் என்றால் என்ன, எதனால் அது ஆபத்தாக மாறுகிறது என்பதை கூகுள் செய்து பாருங்கள். எனக்கெல்லாம் எங்கே இது இருக்கப் போகிறது என்று அலட்சியமாக இருக்காதீர்கள்.

ரெகுலராக ஹெல்த் செக்கப் செய்யுங்கள். நம்மில் 40 சதவீத பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், அதுகுறித்து விழிப்புணர்வு இல்லாமலே இருக்கிறார்கள். அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வழிகாட்டுதல் படி சரிசெய்து விடலாம். நானும் அதைத்தான் எதிர்பார்த்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அரசு அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in