அயோத்திக்கு படையெடுத்த பாலிவுட், டோலிவுட், தமிழ் திரையுலக பிரபலங்கள்!

அயோத்தி கோயில் முன்பு நடிகர் ரஜினிகாந்த்
அயோத்தி கோயில் முன்பு நடிகர் ரஜினிகாந்த்

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அங்கு இந்திய திரைப்படைத்துறையைச் சேர்ந்த ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

அயோத்தி ராமர் கோயில்
அயோத்தி ராமர் கோயில்

உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதற்காக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இங்கு பால பருவ ராமரின் திருவுருவச் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது.

அயோத்தி ராமர் கோயில் கருவறைக்குள் வைப்பதற்காக கர்நாடகா மாநிலம், மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்த 200 கிலோ எடையிலான பால ராமர் சிலை அயோத்திக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 18-ம் தேதி அந்த சிலை கோயில் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது.

கும்பாபிஷேகத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று அயோத்தியில் உள்ள ராமஜென்ம பூமிக்கு வருகை தந்துள்ளார். பகல் 12.05 முதல் 12.55 மணி வரை விழாவில் பங்கேற்கிறார். இதன் பின்னர் குபேர் தில சிவன் கோயிலில் ராமர் சிலையை அவர் வழிபடுகிறார்.

அயோத்தி கோயில்  முன் கங்கனா
அயோத்தி கோயில் முன் கங்கனா

இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க பல திரைப்பிரபலங்கள், பல நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் மற்றும் துறவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தில் இருந்து நடிகர்கள் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் அவரது மகன்கள் நேற்று அயோத்தி புறப்பட்டுச் சென்றனர்.

இன்று பிற்பகல் 12 மணியளவில் நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவுக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், அலியாபட், ரன்பீர் கபூர், கங்கனா என பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் ஆஜராகியுள்ளனர். அதே போல, தெலுங்கு திரையுலக பிரபலங்களான நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் மற்றும் அவரது குடும்பத்தினர் அயோத்தி சென்றுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in