கர்ப்ப காலத்தில் தீபிகா படுகோனேவைப் பிரிகிறாரா ரன்வீர் சிங்... வெளியான காரணத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ரன்வீர்- தீபிகா
ரன்வீர்- தீபிகா

சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நடிகர் ரன்வீர் சிங் தனது திருமணப் புகைப்படங்களை நீக்கி இருக்கிறார். இதையடுத்து, கர்ப்ப காலத்தில் மனைவி தீபிகாவைப் பிரிகிறாரா ரன்வீர் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பாலிவுட் நட்சத்திர ஜோடியான தீபிகா- ரன்வீர் ஜோடி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடித்தனர். இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாங்கள் பெற்றோர் ஆகப்போகும் செய்தியை அறிவித்தனர். கடந்த 2018-ம் ஆண்டு இந்த ஜோடி இத்தாலியில் கோலாகலமாகத் திருமணத்தை முடித்தது. தீபிகா கர்ப்பமாக இருக்கும் நிலையிலும் தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

'லேடி சிங்கம்’ ஷக்தி ஷெட்டியாக தீபிகா...
'லேடி சிங்கம்’ ஷக்தி ஷெட்டியாக தீபிகா...

சமீபத்தில் ’லேடி சிங்கம்’ ஷக்தி ஷெட்டியாக அவர் காக்கிச் சட்டை அணிந்து அசத்திய படப்பிடிப்புத் தள புகைப்படங்கள் வெளியானது. இதைப் பார்த்த ரசிகர்கள், ’கர்ப்பமாக இருக்கும் தீபிகாவின் வயிறே தெரியவில்லையே... அவர் வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெறுகிறாரா?’ என சந்தேகம் கிளப்பினர். ஆனால், இந்த சர்ச்சைகளுக்கு ரன்வீர்- தீபிகா ஜோடி எந்தவொரு விளக்கமும் கொடுக்கவில்லை.

இப்படியான சூழ்நிலையில்தான், ரன்வீர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து திருமணப் புகைப்படங்களைத் திடீரென நீக்கியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பொதுவாக சினிமா பிரபலங்கள் தாங்கள் பிரிய போகிறோம் என்பதை இப்படித்தான் புகைப்படங்களை நீக்கி ரசிகர்களுக்கு சூசகமாகத் தெரிவிப்பார்கள.

அப்படி, ’கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் ரன்வீர் தீபிகாவைப் பிரிந்து விட்டாரா... இருவருக்குள்ளும் மனக்கசப்பா?’ என்றெல்லாம் கேள்வி எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

தீபிகா படுகோனே, ரன்வீர்...
தீபிகா படுகோனே, ரன்வீர்...

ஆனால், தீபிகாவுடன் எடுத்த மற்ற புகைப்படங்களை அவர் நீக்கவில்லை. தீபிகா- ரன்வீர் பிரிவு என்ற விஷயம் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், ரன்வீரின் நெருங்கிய வட்டாரத்தினர், ”அதெல்லாம் வெறும் வதந்தி. இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். தீபிகா தன்னுடைய கர்ப்ப காலத்தை என்ஜாய் செய்து வருகிறார்.

இருவரும் தங்கள் வேலைகளை முடித்து ’பேபி மூன்’ செல்ல திட்டமிட்டு இருக்கிறார்கள். ரன்வீர் புகைப்படங்களை நீக்கவில்லை. சில தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் மறைத்திருக்கலாம் அல்லது தொழில்நுட்ப கோளாறாக இருக்கும். இதை பெரிதுபடுத்த வேண்டாம்” எனச் சொல்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in