விளையாட்டுல மதத்தை கலந்து இருக்கீங்க! அரசியல் வசனத்துடன் வெளியான ’லால் சலாம்’ டீசர்

லால் சலாம் திரைப்பட முன்னோட்ட காட்சி வெளியீடு
லால் சலாம் திரைப்பட முன்னோட்ட காட்சி வெளியீடு

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ’லால் சலாம்’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சி வெளியாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும், லால் சலாம் திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. லைக்கா புரொடக்சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் இந்த திரைப்படம் தயாராகி வருகிறது. இதில் ரஜினிகாந்த் உடன் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், ஜீவிதா, தம்பி ராமையா, அனந்திகா, விவேக் பிரசன்னா, தங்கதுரை உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

லால் சலாம் குழுவினர்
லால் சலாம் குழுவினர்

விரைவில் இத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களில் 2.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த முன்னோட்ட காட்சியை பார்வையிட்டுள்ளனர். கிரிக்கெட் விளையாட்டில் கலந்துள்ள அரசியலை மையமாக வைத்து இத்திரைப்படம் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம்
ரஜினிகாந்தின் லால் சலாம் திரைப்படம்

அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரில், கிரிக்கெட்டில் இரு அணிகளுக்கு இடையே ஏற்படும் மோதல் குறித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது. மேலும் இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் ஒரு வசனத்தில் ”விளையாட்டில் மதத்தை கலந்து இருக்கீங்க. குழந்தைகள் மனதில் விஷத்தை விதைத்து இருக்கீங்க” என்று பேசியுள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in