ரஜினி, கமல்... அஜித், விஜய்... பிரபலங்களின் வாக்குப்பதிவு விவரங்கள்!

ரஜினி, கமல்... அஜித், விஜய்... பிரபலங்களின் வாக்குப்பதிவு விவரங்கள்!

மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், தங்களது ஜனநாயகக் கடமை ஆற்ற திரையுலக பிரபலங்கள் ரஜினி, கமல் துவங்கி அஜித், த்ரிஷா என யார் யார் எந்த வாக்குச்சாவடியில் வாக்களிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

* நடிகர் ரஜினிகாந்த்- ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ், 7-7.30 மணியளவில்.

* மநீம தலைவர், நடிகர் கமல்ஹாசன்- எல்டாம்ஸ் ரோடு, திருவள்ளுவர் சாலை பள்ளி. காலை 9 மணிக்கு வாக்களிக்க வாய்ப்பு

* நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவக்குமார் குடும்பம்- தி.நகர் இந்தி பிரச்சார சபா, மதியம் 1 மணி.

* நடிகை த்ரிஷா- செயின்ட் சேவியர்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, டிடிகே ரோடு, காலை 10.30 மணியளவில்

த்ரிஷா
த்ரிஷா

* நடிகர் சத்யராஜ்- நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகம், காலை 9- 9.30 மணியளவில்.

* நடிகை வரலட்சுமி- கோட்டூர்புரத்தில் உள்ள ஏஎம்எம் பள்ளி, காலை 7.45-8 மணியளவில்.

* நடிகர் நாசர் குடும்பத்தினர் - வளசரவாக்கம் தேவி அகாடெமி, காலை 9.30- 10 மணியளவில்

*இயக்குநர் பாக்கியராஜ், நடிகர் சாந்தனு குடும்பம்- பத்ம சேஷாத்ரி பள்ளி, நுங்கம்பாக்கம் காலை 7 மணி

* நடிகை பிரியா பவானி ஷங்கர்- மாம்பாக்கம் அரசு பள்ளி, கேளம்பாக்கம், காலை 8.30 மணியளவில்

* நடிகர்கள் அஜித், ஷாலினி- நீலாங்கரை

* பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்த் மகன்கள், நடிகர் விஜய் ஆண்டனி, நடிகர் விவேக் குடும்பத்தினர், இயக்குநர் முருகதாஸ் குடும்பத்தினர்- காவேரி ஸ்கூல், சாலிகிராமம் காலை 7 மணி.

*நடிகை குஷ்பு - ராஜலட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளி, மந்தைவெளிப்பாக்கம்

* நடிகர் சாருஹாசன், சுஹாசினி, நந்தன் மணி ரத்னம் - ஸ்ரீநிவாஸ காந்தி நிலையம், ஆழ்வார்பேட்டை. காலை 9 மணி.

உங்கள் ஜனநாயக கடமையை செய்ய மறக்காதீங்க. அனைவரும் தவறாமல் உங்கள் வாக்குப்பதிவை உறுதி செய்து கொள்ளுங்கள். இது விழிப்புணர்வு பதிவு மட்டுமே. ஒவ்வொருவரும் தங்களது வாக்கை செலுத்த வேண்டியது அவசியம்.

இதையும் வாசிக்கலாமே...


கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in