நடிகர் சிம்புவுக்கு ரெட்கார்டு; ’தக் லைஃப்’ படத்தில் நடிக்க தடை!

நடிகர் சிம்புவுக்கு ரெட்கார்டு; ’தக் லைஃப்’ படத்தில் நடிக்க தடை!

”நடிகர் சிம்பு ‘தக் லைஃப்’ படத்தில் நடிக்கக் கூடாது. அவருக்கு ரெட்கார்டு போடப்பட்டுள்ளது” என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறார்.

'மாநாடு’ படத்திற்கு அடுத்து நடிகர் சிம்பு, கெளதம் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிப் பெற்றதும், அடுத்து தான் தயாரிக்க இருந்த ‘கொரோனா குமார்’ படத்திலும் சிம்புவை நடிக்க வைக்க ஒப்பந்தம் போட்டிருந்தார்கள்.

நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு

ஆனால், படம் அறிவித்து பல வருடங்கள் ஆகியும் அதுகுறித்து அடுத்த அப்டேட் எதுவும் இல்லை. இதனால், படம் கைவிடப்பட்டது என்றும் சிம்புவை விட்டுவிட்டு வேறு நடிகரை நடிக்க வைக்க இருக்கிறார்கள் என்றும் தகவல் வெளியானது.

இந்நிலையில், கமல்- மணி ரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது.

’தக் லைஃப்’ படத்தில் நடிகர் சிம்பு நடிக்கக் கூடாது என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். தயாரிப்பாளர்கள் சங்கத்திலும் சிம்பு மீது புகார் கொடுத்திருக்கிறார். இந்தப் படத்திற்காக சிம்புவுக்கு ரூ. 9.5 கோடி சம்பளம் பேசப்பட்டு, ரூ. 4.5 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், சிம்பு படத்தில் நடித்துக் கொடுக்க நேரம் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார் என முன்பே நீதிமன்றத்தை நாடியிருந்தார் ஐசரி கணேஷ். ’நான் திருந்திவிட்டேன். நடிப்பில் இரண்டாவது இன்னிங்கிஸில் இறங்கி அடிக்கப் போகிறேன்’ என பேசிய சிம்பு மீண்டும் பழையபடி படத்தில் நடிக்க மெத்தனம் காட்டுவது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

'தக் லைஃப்’ படத்தில் சிம்பு...
'தக் லைஃப்’ படத்தில் சிம்பு...

இப்போது தயாரிப்பாளர் சங்கத்திலும் ஐசரி கணேஷ் கொடுத்துள்ள புகாரின் படி விசாரித்திருக்கிறார்கள். அதன்படி, வேல்ஸ் நிறுவனத்தோடு சிம்பு செய்திருந்த ஒப்பந்தம் முடியும் வரை வேறு படங்களில் நடிக்கக் கூடாது என மறைமுகமாக அவருக்கு ரெட் கார்ட் விதிக்கப்பட்டிருக்கிறது.

இதனால், ‘எஸ்.டி.ஆர். 48’ படத்திலும் நடிக்காமல் அவர் காலம் தாழ்த்தி வந்தார். ஆனால், இப்போது ‘தக் லைஃப்’ படத்தில் அவர் நடித்து வருவதால், அதன் படப்பிடிப்பை உடனே நிறுத்த வேண்டும் என ஐசரி கணேஷ் கூறியிருக்கிறார். மேலும், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது சிம்புவின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனால், ‘தக் லைஃப்’ படத்திற்கு மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பத்ம விருது பெற்றவர்களுக்கு ராஜ உபசரிப்பு... இரவு விருந்தளித்த அமைச்சர் அமித் ஷா!

கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் திடீர் ஒத்திவைப்பு... அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!

நீட் தேர்வு முறைகேடு: பள்ளி ஆசிரியர் உள்பட 3 பேர் மீது வழக்கு!

494 மதிப்பெண்கள் எடுத்த மாணவர் தற்கொலை... மதிப்பெண்கள் குறைந்ததாக விபரீதம்!

பிகினி உடையில் ‘கங்குவா’ நாயகி... தெறிக்க விடும் நெட்டிசன்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in