மகனுக்கு வேல் கொடுத்து ஆசீர்வாதம்... நெகிழ்ந்த பிரேமலதா!

மகனுக்கு வேல் கொடுத்து ஆசீர்வாதம்... நெகிழ்ந்த பிரேமலதா!

தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், மகனுக்கு வேல் கொடுத்து பிரேமலதா ஆசீர்வாதம் செய்துள்ளார். ”முருகனுக்கு பராசக்தி வேல் கொடுத்தது போல, என் மகனுக்கு வேல் கொடுத்துள்ளேன்” என்று பேசியும் நெகிழ்ந்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் நடைபெற இருப்பதால் இன்று மாலையுடன் அனைத்துக் கட்சிகளின் பிரச்சாரங்களும் நிறைவு பெறுகிறது. இதனால், இன்னும் சில மணிநேரங்களே இருப்பதால் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாகி உள்ளனர். விருதுநகர் தொகுதியில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து வேட்பாளராக களமிறங்கி இருக்கிறார் விஜய பிரபாகரன்.

விருதுநகர் தொகுதிக்கு உட்பட்ட திருப்பரங்குன்றம் பகுதியில் தனது மகனுக்காக இன்று பிரச்சாரம் செய்தார் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா. தமிழகம் முழுவதும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்துவிட்டு தன் மகனுக்காக இப்போதுதான் வருகிறேன் என்றும் கூறினார்.

அப்போது அவர் பேசியதாவது, “விஜய பிரபாகரன் இனி உங்கள் வீட்டுப் பிள்ளை. உங்களிடம் ஒப்படைத்துவிட்டோம். விஜய பிரபாகரனுக்கு வாக்களித்து மாணிக்கம் தாகூருக்கு ஓய்வு கொடுங்கள்” என்றார். பின்பு, விஜய பிரபாகரனுக்கு வெற்றியின் சின்னமான வேல் கொடுத்து ஆசீர்வதித்தார். “அந்த பராசக்தி முருகனுக்கு வேல் கொடுத்தது போல, நான் என் மகனுக்கு வேல் கொடுத்துள்ளேன். உங்கள் அனைவரின் ஆசீர்வாதமும் அவருக்கு வேண்டும்” என்றார்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

முன்னதாக, விஜய பிரபாகரனை கேப்டன் விஜயகாந்த்தாகவே நினைத்து வாக்களிக்க வேண்டும் என்று அங்கு கூடியிருந்த மக்களிடம் உருகினார் பிரேமலதா விஜயகாந்த். விஜய பிரபாகரனை எதிர்த்து பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் விருதுநகரில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in