அதிர்ச்சி... 27 வயதில் காலமான பிரபல சினிமா விமர்சகர்!

அதிர்ச்சி... 27 வயதில் காலமான பிரபல சினிமா விமர்சகர்!

பிரபல சினிமா விமர்சகர் ஆங்கிரி ரேண்ட்மேன் சிகிச்சைப் பலனின்றி நேற்று இரவு காலமாகியுள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சிக்குப் பிறகு படங்களை விமர்சனம் செய்பவர்கள் நிறையபேர் பெருகினர். அதில் யூடியூபில் கத்தியபடி விமர்சனம் செய்து கவனம் ஈர்த்த யூடியூபர் ஆங்கிரி ரேண்ட்மேன் தனது 27வயதில் காலமாகியுள்ளார். இவரது இயற்பெயர் அப்ரதீப் சாஹா. ‘கே.ஜி.எஃப்’, ‘விக்ரம்’ போன்ற படங்களின் விமர்சனத்தால் இணையத்தில் அதிகம் கவனிக்கப்பட்டார்.

கடந்த 2017ஆம் ஆண்டு யூடியூப்பில் தனது பயணத்தைத் தொடங்கினார் ஆங்கிரி ரேண்ட்மேன். சில நாட்களுக்கு முன்பு இவருக்கு இதயத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனில்லாமல் நேற்று இரவு காலமானார்.

இவரது இறப்பிற்கு என்ன காரணம் என்பது இன்னும் தெளிவாகவில்லை. தமிழ், இந்தி, தெலுங்கு என அனைத்து மொழி படங்களுக்கும் கோபமாக கத்தி தனது தனித்துவமான பாணியில் விமர்சனம் செய்த ஆங்கிரிமேனின் இழப்பு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

யூடியூப் சேனல் தொடங்கிய ஆரம்ப காலத்தில் ஃபுட்பால், கிரிக்கெட் என விளையாட்டு தொடர்பான செய்திகளைப் பகிர்ந்து வந்தார். பின்புதான் சினிமா விமர்சனங்களையும் செய்ய ஆரம்பித்தார். கடைசியாக ஒரு மாதத்திற்கு முன்பு ஜோதிகா, மாதவன் நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்திற்காக விமர்சனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

பிரச்சாரத்தில் திடீர் உடல்நலக்குறைவு... மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி!

வன்னிய சமுதாயத்தை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் அன்புமணி குடும்பம்... சி.வி.சண்முகம் கடும் தாக்கு!

அசுரத்தனமான உழைப்பு... விக்ரம் பர்த்டே ஸ்பெஷலாக வெளியான ’தங்கலான்’ வீடியோ!

40+ ஆச்சு... இன்னும் இவங்க பேச்சுலர் ஹீரோஸ் தான்!

ஓட்டுக்குப் பணம் கொடுக்க முயற்சி... காருடன் ரூ.2.25 லட்சத்தையும் விட்டுவிட்டு தப்பியோடிய கும்பல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in