நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

அண்ணாச்சி கடைக்கு அம்பாசடர் ஆன ரஜினி... ’கூலி’யை காலி செய்யும் நெட்டிசன்கள்!

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படத்தின் டைட்டில் ‘கூலி’ என நேற்று அறிவிக்கப்பட்டது. டைட்டில் டீசர் பார்த்து ரசிகர்கள் ஒருபக்கம் ஃபயர் விட்டுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் இந்த டீசரை நெட்டிசன்கள் கேலியும் செய்து வருகின்றனர்.

மாஸ் ஹீரோக்கள் படம் குறித்தான அப்டேட் வரும்போது ரசிகர்கள் கொண்டாடுவது ஒருப்பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அதை நெட்டிசன்கள் மீம் மெட்டிரியலாக்கி இணையத்தில் வைரலாக்குவதும் உண்டு.

அப்படித்தான் ரஜினியின் ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசரை ரசிகர்கள் அண்ணாச்சியின் சரவணா ஸ்டோர்ஸ் நகைக் கடை விளம்பரத்தின் இசையோடு சிங்க் செய்து அலப்பறை செய்து வருகின்றனர்.

பிளாக் அண்ட் வொயிட் கலரில் கோல்ட் ஹைலைட்டோடு இந்த டீசர் அமைந்திருக்கும். இதில் நகைகளின் குளோஸ்- அப் காட்சிகளுக்கு இசையை சிங்க் செய்து, வீடியோவின் இறுதியில் ரஜினி பேசும் வசனத்தையும் விளம்பர வசனத்தோடு அச்சு பிசகாமல் இணைத்துள்ளனர் நெட்டிசன்கள். இதுமட்டுமல்லாது, ‘கூலி காலி’ எனவும் படத்தை இப்போதே டிரோல் செய்யவும் ஆரம்பித்து விட்டனர்.

நெட்டிசன்களின் இந்த கிரியேட்டிவிட்டியைப் பார்த்த ரஜினி ரசிகர்கள், ‘இது நன்றாக இருக்கிறது. ஆனால், படத்தின் மீது இப்போதே நெகட்டிவிட்டி பரப்ப வேண்டாம்’ எனவும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

’கூலி’ ரஜினிகாந்த்
’கூலி’ ரஜினிகாந்த்

ரஜினி தற்போது ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார். அக்டோபர் மாதம் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதற்கடுத்து, ஜூன் மாதத்தில் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. ரஜினி தவிர படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்தான விவரங்களை படக்குழு வரும் நாட்களில் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in