நரிக்குறவர் மக்களை 'லால் சலாம்' பார்க்க வைத்த ரஜினி ரசிகர்கள்... துரத்தப்பட்ட திரையரங்கில் நடந்த மாஸ் சம்பவம்!


நடிகர் ரஜினிகாந்த்...
நடிகர் ரஜினிகாந்த்...

சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் நரிக்குறவர் இன மக்களுக்கு டிக்கெட் கொடுத்து ரஜினி ரசிகர்கள் ‘லால் சலாம்’ படம் பார்க்க வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

படம் பார்க்க வந்த நரிக்குறவர் இன மக்கள்...
படம் பார்க்க வந்த நரிக்குறவர் இன மக்கள்...

’மதத்தை நினைக்காமல் மனிதநேயத்தை மனசுல வை’ என நடிகர் ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ படத்தில் பேசியுள்ள வசனம் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்தது. அதுபோலவே, இந்தப் படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் இதன் இசை வெளியீட்டு விழாவில் ”ரஜினிகாந்த் மனிதநேயவாதி. அப்படியான ஒருவரால்தான் ‘லால் சலாம்’ படக்கதையில் நடிக்க முடியும்” எனக் கூறினார்.

இப்படி ‘லால் சலாம்’ பட விழாவில் பேசிய இந்த விஷயங்களை நிரூபிக்கும் விதமாக இன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. நடிகர் சிம்புவின் நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு ‘பத்துதல’ படம் வெளியானது. இந்தப் படம் பார்ப்பதற்காக சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கத்திற்கு நரிக்குறவர் இன மக்கள் சிலர் சென்றனர்.

லால் சலாம் படம் பார்த்த மகிழ்ச்சியில் நரிக்குறவர் இன பெண்.
லால் சலாம் படம் பார்த்த மகிழ்ச்சியில் நரிக்குறவர் இன பெண்.

ஆனால், அவர்களை ரோகிணி திரையரங்கம் உள்ளே நுழைய விடாமல் வாயிலிலே தடுத்து நிறுத்தி வெளியேறச் சொன்ன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரோகிணி திரையரங்கத்திற்கு எதிராக இணையத்தில் ஹேஷ்டேக் டிரெண்டானது நினைவிருக்கலாம்.

தற்போது அதே ரோகிணி திரையரங்கிற்கு நரிக்குறவர் இன மக்கள் ‘லால் சலாம்’ படம் பார்ப்பதற்கான டிக்கெட் கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

இதுகுறித்து நரிக்குறவர் இன மக்கள் கூறுகையில்," ’பாட்ஷா’, ‘தளபதி’ என ரஜினியின் எல்லாப் படங்களையும் ஒன்று விடாமல் பார்த்து விடுவோம். இப்போது ‘லால் சலாம்’ பார்க்க வந்திருக்கோம். ரஜினி பொண்ணு இயக்கி இருக்காங்க. படம் ஹிட்டாகனும். ரஜினிதான் டிக்கெட் கொடுத்துருக்காரு” என மகிழ்ச்சி ஆரவாரத்துடன் அவர்கள் பேசி இருக்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...


ரஜினி மகளை உசுப்பேற்றும் ரசிகர்கள்... ஐஸ்வர்யாவுக்கு தனி கொடி அறிமுகப்படுத்தி அலப்பறை!

அதிர்ச்சி... நேரலையில் சிவசேனா பிரமுகரை சுட்டுக்கொன்றுவிட்டு, கொலையாளியும் தற்கொலை!

ஒலிம்பிக் மெடலுடன் ஈபிள் டவர் பகுதியை எடுத்து செல்லலாம்... பிரான்ஸ் அசத்தல் அறிவிப்பு!

பகீர் வீடியோ... தியேட்டருக்குள் தீவைத்து கொண்டாடிய ரசிகர்கள்!

மின்வாரிய அதிகாரிகள் அலட்சியம்... கால்களை பறிகொடுத்த இளைஞர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in