’GOAT’ முதல் சிங்கிளுக்கு அவ்வளவாய் வரவேற்பு இல்லை... யுவனின் பழைய வீடியோவை போட்டு வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

விஜய்- யுவன் ஷங்கர் ராஜா
விஜய்- யுவன் ஷங்கர் ராஜா

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘GOAT' படத்தில் இருந்து முதல் பாடலான ‘ஆர் யூ ரெடி’ நேற்று முன் தினம் வெளியானது. யுவன் இசையில் வெளியான இந்தப் பாடல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யத் தவறிவிட்டது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'GOAT' படத்தில் இருந்து நேற்றும் முன்தினம் 'ஆர் யூ ரெடி’ என்ற முதல் சிங்கிள் வெளியாகியது. ‘புதியகீதை’ படத்திற்குப் பிறகு யுவன் - விஜய் நீண்ட வருடங்கள் கழித்து ஒன்றிணைவதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு பாடலுக்கு இருந்தது. ஆனால், இந்தப் பாடல் பல சர்ச்சைகளைக் கிளப்பியதே தவிர ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யத் தவறியது.

விஜய், யுவன் ஷங்கர் ராஜா
விஜய், யுவன் ஷங்கர் ராஜா

இது தொடர்பாக ரசிகர்கள் தங்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர். குத்துப் பாடல்களுக்கு இசையமைப்பது என்றால் தலைவலிதான் என யுவன் ஷங்கர் ராஜா முன்பு சொல்லியிருந்த வீடியோ ஒன்றை இப்போது நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தப் பழைய வீடியோவில், “பாடல்கள் இசையமைப்பதில் எனக்கு கஷ்டமான விஷயமே குத்துப் பாட்டுதான். இயக்குநர்கள் என்னிடம் வந்து கேட்டால், ‘நான் இன்னிக்கு செத்தேன்’ என நினைத்துக் கொள்வேன். இசையில் நிறைய வகைகள் உண்டு. ஆனால், குத்துப் பாடல்களில் யோசிக்க எதுவுமே கிடையாது. சந்தமே கொஞ்சம் தான். அதில் யோசிக்கிறது எனக்கு பெரிய தலைவலி” என யுவன் ஷங்கர் ராஜா பேசியிருக்கிறார்.

இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள ரசிகர்கள், யுவன் குத்துப் பாடலில் ஜீரோ என்று சொல்லி இதுதான் ‘விசில் போடு’ தோல்விக்குக் காரணம் எனக் கூறி வருகின்றனர்.

படம் செப்டம்பர் 5 அன்று வெளியாவதால், படத்திற்கான புரோமோஷன் பணிகளும் விறுவிறுப்பாகியுள்ளது. அடுத்தடுத்த பாடல்களாவது தங்களுக்கு பிடித்தபடி அமையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

ஊடகங்கள், வலைதளங்களிலும்கூட பிரச்சாரம் செய்யக்கூடாது... மீறினால் சிறை!

இறுதிகட்டத்தில் சூடு பிடிக்கும் பிரச்சாரம்... தேர்தல் பத்திர விவகாரத்தை கையிலெடுக்கும் இந்தியா கூட்டணி

திமிர் பிடித்த கூட்டணி தலைவர்களை இந்தத் தேர்தல் தண்டிக்கும்... எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்!

தேர்தல் நாளன்று சம்பளத்துடன் கட்டாய விடுமுறை... பெங்களூரு ஐ.டி நிறுவனங்களுக்கு உத்தரவு!

மின்சாரக் கார்களுக்கு என்னாச்சு... 14 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் டெஸ்லா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in