பேச்சு இல்ல, வீச்சுதான்... 'GOAT' படம் குறித்து யுவன் ஷங்கர் ராஜா!

விஜய் யுவன் ஷங்கர் ராஜா
விஜய் யுவன் ஷங்கர் ராஜா

‘பேச்சு இல்ல வீச்சுதான்’ என 'GOAT' படம் குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா கூறியுள்ளார். படம் குறித்து யுவன் ஷங்கர் ராஜா பாசிட்டிவாகப் பேசியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா
யுவன் சங்கர் ராஜா

தனது அரசியல் என்ட்ரியை நடிகர் விஜய் அறிவித்துள்ளார். முழுநேரமாக அரசியல் இறங்க இருப்பதால் இப்போதைக்கு தான் ஒத்துக் கொண்டிருக்கும் 'GOAT' மற்றும் ‘தளபதி 69’ படங்களை மட்டும் நடித்துக் கொடுத்து விட்டு சினிமாவை விட்டு விலகுவதாகக் கூறியுள்ளார். விஜய் சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்பது ரசிகர்களை வருத்தமடையச் செய்யக் கூடியதாகவே இருக்கிறது. இப்படியான சூழ்நிலையில்தான் 'GOAT' படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இலங்கையில் நடக்க இருக்கும் தனது இசைக்கச்சேரியை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசியுள்ளார்.

’தளபதி 68’  படத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் விஜய்.
’தளபதி 68’ படத்தில் இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் விஜய்.

அந்த சந்திப்பில், “எனது அக்கா பவதாரிணியின் உடல் இலங்கையில் இருந்து கொண்டு செல்ல இங்கிருந்த நிறைய பேர் எங்களுக்கு உதவினார்கள். அவர்களுக்கு நன்றி. கீபோர்டில் எனக்கு விரல் வைக்கச் சொன்னது அக்காதான். உனக்கு இசை வரும். நீ கற்றுக் கொள் எனக் கூறி அவர்தான் என்னை ஊக்கப்படுத்தினார். நிச்சயம் அவரது நினைவாக பாடல்கள் இசைக்கச்சேரியில் இருக்கும்” என்று கூறினார்.

பின்னர் 'GOAT' படம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. “'GOAT' படத்தின் அப்டேட்டை நிச்சயம் நான் சொல்ல மாட்டேன். இந்த முறை தெளிவாக இருக்கிறேன். ஏன்னா, இனிமே பேச்சு இல்ல! வீச்சுதான்! உங்களைப் போலவே நானும் படத்திற்கு ஆவலாக உள்ளேன். படத்தின் அனைத்து வேலைகளும் நன்றாக நடந்து வருகிறது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in