நடிகர் விஜய் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்... இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது பற்றியும் அவரது எதிர்கால அரசியல் குறித்தும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஜேம்ஸ் வசந்தன் காமதேனு டிஜிட்டல் நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

அரசியலில் விஜய்:

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை அறிவித்தார். தற்போது 'தி கோட்' படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதற்கடுத்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தனது 69-வது படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு சினிமாவை விட்டு ஒதுங்க முடிவெடுத்திருக்கிறார் விஜய்.

இந்த நிலையில், அரசியலுக்கு வருவதற்காக நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிக்காமல் போனால் திரைத்துறையில் பல வகையில் பலருக்கும் இழப்பு என்றும் பலர் சொல்லி வருகின்றனர். இதுகுறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனிடம் காமதேனு டிஜிட்டலுக்காகப் பேசினோம்.

“நடிகர் விஜய் தற்போது சினிமாவில் உச்சத்தில் இருக்கிறார். கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். பல சுழற்சி இருக்கும் இந்த சினிமா துறையில் அவரை நம்பியும் நிறைய பேர் இருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு அவர் அரசியலுக்கு வருவது தீர்க்கமான முடிவு.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்:

ஒருவேளை, அவர் முதலமைச்சர் ஆனால் கூட அவருக்கு ரூ. 2 லட்சம் தான் சம்பளம். அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். அவர் அரசியலுக்கு வந்த பின்பு என்ன செய்ய வேண்டும் என்பதை விட, எதில் எல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை என்னால் சொல்ல முடியும். அரசியல் களத்தில் நிறைய சோதனைகள் வரும். அதில் முக்கியமானது விஜய் தன்னைச் சுற்றி இருப்பவர்களை தன்னைப் போல அரசியலில் சேவை எண்ணம் கொண்டவர்களாக வைத்திருக்க வேண்டும்.

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

ஏனெனில், உயர் மட்டத்திற்குப் போனால் தன்னைச் சுற்றி இருக்கும் நான்கு பேர் சொல்வதுதான் நமக்கு வேதவாக்காகி விடும். அதனால், தன்னைச் சுற்றி இருப்பவர்களை சரியானவர் களாக விஜய் தேர்ந்தெடுக்க வேண்டும். அவருக்கு அரசியலில் நல்ல எதிர்காலம் இருப்பதாக நினைக்கிறேன்” என்றார் ஜேம்ஸ் வசந்தன்.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழை... 4 நாட்களுக்கு வெப்பம் குறையும் என அறிவிப்பு!

பெங்களூருவில் பரபரப்பு... ரேவண்ணாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு!

உலக செஞ்சிலுவை தினம்: பேரிடர் முதல் போர் வரை... கலங்கிய மக்களுக்கு ஓடோடி உதவிய கடவுளின் தூதுவர்கள்

பெண் பத்திரிகையாளர் பரபரப்பு புகார்... சவுக்கு சங்கர் மீது சென்னையிலும் 2 வழக்குகள் பதிவு!

பரபரப்பு... உலகம் முழுவதும் தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் அறிவிப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in