குட் நியூஸ்... விரைவில் வருகிறது ‘மெட்டி ஒலி 2’!

‘மெட்டி ஒலி’
‘மெட்டி ஒலி’

சீரியல் விரும்பிகள் மத்தியில் நாஸ்டாலஜியாவாக இருக்கும் ‘மெட்டி ஒலி’ சீரியலின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இந்த அப்டேட் சின்னத்திரை ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

‘மெட்டி ஒலி’
‘மெட்டி ஒலி’

“அம்மி அம்மி அம்மி மிதித்து...” என ஹைடெசிபலில் டிவியில் பாடல் ஒலித்தாலே குடும்பத்தில் உள்ள அத்தனை பேரும் டிவி முன்பாக ஆஜராகிவிடுவார்கள். அப்படி பலருக்கும் பிடித்த ஒரு சீரியலாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ இருந்தது.

கொரோனா சமயத்தில் மறுஒளிபரப்பு செய்த போது கூட டிஆர்பி-யில் இந்த சீரியல் ஹிட் அடித்தது. அக்கா-தங்கைகள் ஐந்து பேர் அவர்களது குடும்பம் என்ற கதையைச் சுற்றி நடக்கும் இந்த சீரியலில் காவேரி, வனஜா, காயத்ரி, உமா, ரேவதி பிரியா ஆகியோர் ஐந்து சகோதரிகளாக நடித்து இருந்தனர். இவர்களில் உமா மற்றும் வனஜா இருவரும் உண்மையிலேயே சகோதரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா சமயத்தின் போது உமா உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார் என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

‘மெட்டி ஒலி’
‘மெட்டி ஒலி’

சமீபத்தில் கூட வனஜா, காவே, காயத்ரி மூன்று பேரும் சந்தித்து வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் டிரெண்டாது. இந்த சீரியலை இயக்கிய திருமுருகன், மெட்டி ஒலி இரண்டாம் பாகம் நிச்சயம் வரும் எனச் சொல்லி இருந்தார்.

இதையடுத்து இப்போது, மெட்டி ஒலி இரண்டாம் பாகத்திற்காக நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. புதுமுகங்கள், புதுக்கதைக் களம் என பரபரப்பாக நகர்கிறது. இம்முறை திருமுருகன் ‘மெட்டி ஒலி2’ வை தயாரிக்கிறார். இயக்குநர் விக்ரமாதித்தன் இயக்குகிறார் என அறிவித்துள்ளது மெட்டி ஒலி சீரியல் குழு. இரண்டாம் பாகமும் சன் டிவியில் தான் ஒளிபரப்பாகிறதாம். ‘மெட்டி ஒலி’ முதல் பாகம் தந்த எதிர்பார்ப்பு இரண்டாம் பாகத்தையும் ரசிகர்களை ஆவலுடன் எதிர்பார்த்துக் காக்க வைத்திருக்கிறது.

இதையும் வாசிக்கலாமே...

நடிகர் விஜய்க்கு ரஜினிகாந்த் திடீர் வாழ்த்து!

முன்கூட்டியே நடக்கிறது பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள்... தேர்தலையொட்டி அரசு அறிவிப்பு!

பேரிடர் நிவாரண நிதி வழங்குவதில் பாரபட்சம்... மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து; தீப்பிழம்பான நகரம்... 6 பேர் பலி, 60 பேர் படுகாயம்!

டெஸ்ட் போட்டி.... இந்திய கிரிக்கெட் அணி புதிய சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in