அரசியலை நோக்கி வரும் போதே நேராக முதலமைச்சர் தான்... நடிகர் விஜயை கிண்டல் செய்த மன்சூர் அலிகான்!

நடிகர் விஜய், மன்சூர் அலிகான்
நடிகர் விஜய், மன்சூர் அலிகான்

வெவ்வேறு மாநில நடிகைகளுடன் முட்டி தேய நடனமும் ஆடிவிட்டு ரிட்டையர்டு வயது வரும்போது அரசியலை நோக்கி வரும் நடிகர்கள் நேராக முதலமைச்சர்தான் என்று நினைக்கிறார்கள் என்று நடிகர் மன்சூர் அலிகான் விமர்சனம் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

தமிழின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார்.தனது கட்சி மக்களவைத் தேர்தலில் போட்டியிடாது என்றும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்தான் போட்டியிடும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார். அதற்குள் கட்சியைப் பலப்படுத்தும் வேலையில் அவர் இறங்கியுள்ளார். இதற்காக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், 2 கோடி உறுப்பினர்கள்‌ என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்‌ சேர்க்கைப்‌ பணிகளில்‌ கூடுதல்‌ கவனம்‌ செலுத்துவதுதான்‌ நமது முதற்கட்டப்‌ பணி என கட்சியினருக்கு தமிழக வெற்றிக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இதற்காக முழு அளவில்‌ உறுப்பினர்‌ சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப்‌ பணிகளில்‌ ஈடுபட வேண்டும் என்று கட்சியினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது‌.

நடிகர் மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான்

இந்த நிலையில் மன்சூர் அலிகான் பேசியுள்ள பேச்சு நடிகர் விஜய் ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், மக்களவைத் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளார். இதற்காக நேற்று முன்தினம் தனது முதல் மாநாட்டையும் அவர் நடத்தியுள்ளார்.

வாக்குச்சீட்டு முறையைக் கொண்டு வரவேண்டும். தமிழ்நாட்டில் போதைப்பொருள் ஒழிக்க வேண்டும். தமிழ்நாட்டு கல்வி நிலையங்களில் தமிழே பயிற்று மொழி என்ற சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இப்படி மாநாடு நடத்திய மன்சூர் அலிகான், " நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. சினிமாவில் வாய் வலிக்க முத்தம் கொடுத்துட்டு வெவ்வேறு மாநில நடிகைகளுடன் முட்டி வலிக்க நடனமும் ஆடி ரிட்டையர்டுனு வரும் போது அரசியலை நோக்கி வரும் நடிகர்கள் நேராக முதலமைச்சர்தான். வில்லன் நடிகர்களான எங்கள் நிலைமை? எங்களையும் முதலமைச்சர் ஆக்குங்க. நானும் சினிமாவில் இருக்கிறவன்தான். இருக்கிற எல்லா கோட்டாக்களையும் அவர்களே எடுத்துக் கொண்டால் எங்களின் கதி?" என்று பேசியுள்ளார். இது நடிகர் விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளது.

நடிகர் மன்சூர் அலிகான்
நடிகர் மன்சூர் அலிகான்

நடிகர் விஜயுடன் 'லியோ' படத்தில் மன்சூர் அலிகான் சேர்ந்து நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் முத்தக்காட்சியில் நடித்திருந்தார். அத்துடன் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியையும் ஆரம்பித்துள்ளார். அவரைக் குறிவைத்து தான் மன்சூர் அலிகான் பேசியுள்ளார் என அவரை சமூக வலைதளத்தில் விஜய் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...  

இன்று தொடங்குகிறது திறன் மதிப்பீட்டுத் தேர்வு!

திமுக எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதி... போராட்டத்தைக் கைவிட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!

லண்டனில் தமிழக இளைஞர் மரணத்தில் திடீர் திருப்பம்; கதறும் பெற்றோர்!

ஹரியாணாவில் பயங்கரம்... பிரபல அரசியல் கட்சி தலைவர் சுட்டுக்கொலை!

அடுத்தடுத்து பெண்களைக் கொன்று உடலை டிரம்மில் அடைத்து வீசும் கொடூரம்... பெங்களூருவில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in