20 வயது மகனிடம் அந்தக் கேள்வியை ஓபனாகக் கேட்ட போனிகபூர் மருமகள்... வாயடைத்து நிற்கும் பாலிவுட்!

மகனுடன் மலைகா...
மகனுடன் மலைகா...

பாலிவுட் நடிகை மலைகா அரோரா தனது 20 வயது மகனிடம் “நீ எப்போது விர்ஜினிட்டியை (கன்னித்தன்மை) இழந்தாய்?” என்ற கேள்வியை நிகழ்ச்சி ஒன்றில் ஓபனாகக் கேட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நடிகை மலைகா அரோராவும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜூன் கபூரும் காதலித்து வருகின்றனர். 50 வயதாகும் மலைகா, அர்ஜூனை விட 12 வயது பெரியவர். சீக்கிரம் போனி கபூர் வீட்டு மருமகளாக இருக்கும் இவருக்கு 20 வயதில் ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மலைகாவுக்கும் பாலிவுட் தயாரிப்பாளர் அர்பாஸ் கானுக்கும் 1998-ல் திருமணமாகி 2017-ல் விவாகரத்து நடந்தது. கணவரை பிரிந்தாலும் மகன் அர்ஹான் கானுடன் வாழ்ந்து வருகிறார் மலைகா.

அர்ஹான் கான் தற்போது அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார். 'தம் பிரியாணி’ எனும் வீடியோ பாட்காஸ்ட்டை யூடியூபில் நடத்தி வருகிறார். இதில் தனது அம்மா மலைகாவுடன் ‘ட்ரூத் ஆர் ஸ்பைஸ்’ என்ற கேம் விளையாடி இருக்கிறார் அர்ஹான்.

இந்த கேமில் மலைகா தனது மகனிடம் ஓபனாக, “நீ எப்போது கன்னித்தன்மையை இழந்தாய்?” என்று கேட்கிறார். அதற்கு அர்ஹான் சிரித்துக் கொண்டே மழுப்ப, “நீ உண்மையைச் சொல்ல வேண்டும்” என்று மீண்டும் கேட்கிறார் மலைகா. அதற்கு அர்ஹான், “அம்மா, உங்க கல்யாணம் எப்போ?” என்று பதில் கேள்விக் கேட்டு மடக்குகிறார்.

மலைகா- அர்ஜூன் கபூர்
மலைகா- அர்ஜூன் கபூர்

அம்மாவும் மகனும் இப்படி உரையாடும் இந்த வீடியோவைப் பார்த்துதான் பாலிவுட் வாயடைத்துப் போயிருக்கிறது. என்னதான் அம்மா, மகனாக இருந்தாலும் இதுபோன்ற கேள்விகளை வைரல் கன்டென்ட்டுக்காக இப்படி கேட்பதா என்று நெட்டிசன்கள் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கோவையில் பணப்பட்டுவாடா... கையும் களவுமாக சிக்கிய பாஜக பிரமுகர்!

முதற்கட்ட தேர்தலில் மோதும் 8 மத்திய அமைச்சர்கள்... வெற்றி கிடைக்குமா?

தேர்தல் நேரத்திலும் திகு திகு... சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்தம்... தமிழ்நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு!

பாஜக தலைவரை கடத்திச்சென்ற கிளர்ச்சியாளர்கள்; அருணாச்சலப் பிரதேசத்தில் பரபரப்பு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in