எதிர்பார்ப்புள்ள படங்களுக்கு பிரச்சினை வருவது வாடிக்கைதான்: சொல்கிறார் லோகேஷ் கனகராஜ்!

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நாளை இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த லோகேஷ் கனகராஜ், 'லியோ' படம் உருவாக காரணமே மாஸ்டர் படம் தான். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 100 சதவீதம் என்னுடைய பாணியில் இந்த படத்தை எடுக்கலாம் என முடிவெடுத்ததாக கூறினார். அதற்கு முழு காரணம் விஜய் தான் என்றும், அவர் தனக்கு முழு சுதந்திரம் அளித்ததாகவும் கூறினார்.

இந்த படத்தில் அவருக்கும் எனக்குமான புரிதல் அதிகமாக இருந்தது. விஜய் படம் ரிலீஸாகும் போது ஏதோ ஒரு சின்ன சின்ன பிரச்சினை இருந்து தான் வருகிறது. மாஸ்டர் பட டைமிலிருந்து பார்த்து வருகிறேன். அது ஏன் என்று தெரியவில்லை என தெரிவித்தார்.

மேலும், ரஜினி படத்தை இயக்குவதை விட மகிழ்ச்சி எதுவும் இல்லை என கூறிய லோகேஷ், சினிமாட்டிக் யுனிவர்ஸ் என்ற ஒன்றை தான் மட்டுமே எடுக்க ஆர்வம் காட்டினால் நடக்காது என்றும், நடிகர்களும் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார். அதேபோல், அதற்கு தயாரிப்பு நிறுவனமும் ஒத்துழைக்க வேண்டும். ஒரு படத்திலிருந்து ஒரு சின்ன விஷயத்தை பயன்படுத்தும் போது ஆட்சேபனை எதுவும் இல்லை என்ற சான்றிதழ் வாங்க வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களை கவனத்தில் வைத்தே செயல்பட வேண்டியுள்ளதாக லோகேஷ் தெரிவித்தார்.

லியோ படம் வெளியாவதில் உள்ள சிக்கல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், படம் எடுப்பது மட்டும் தான் என்னுடைய கைகளில் இருக்கிறது என்றும், அதை ரிலீஸ் செய்வது தயாரிப்பு நிறுவனத்திடம் தான் இருக்கிறது என்றும் கூறினார். எப்போதுமே ஒரு பெரிய எதிர்பார்ப்பு உள்ள படங்களுக்கு இந்த மாதிரியான சிக்கல்கள் எழுதுவது வாடிக்கையானது தான் என்றும், இன்று இரவுக்குள் அவை சரி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in