விஜய் படத்தில் மாஸ் செய்ய காத்திருக்கும் பிரபல ஹீரோ... ரசிகர்கள் குஷி!

நடிகர் விஜய்
நடிகர் விஜய்
Updated on
2 min read

நடிகர் விஜயின் ‘GOAT' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் விஜயுடன் சிவகார்த்திகேயன் கேமியோவில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய் தற்போது ‘GOAT' படத்தில் நடித்து வருகிறார். இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படம் வருகிற செப்டம்பர் 5 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் புரோமோஷன் பணிகளையும் படக்குழு தீவிரப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் முதல் சிங்கிள் வெளியான நிலையில், விஜயின் பிறந்தநாளை ஒட்டி வருகிற ஜூன் மாதம் இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட இருக்கிறது.

விஜய்- சிவகார்த்திகேயன்
விஜய்- சிவகார்த்திகேயன்

இந்தப் படத்தில் நடிகர்கள் பிரபுதேவா, பிரஷாந்த், லைலா, சிநேகா, அஜ்மல் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். இதில் நடிகை த்ரிஷாவும் விஜயுடன் ஒரு சிறப்பு பாடலுக்கு சேர்ந்து நடனமாடுகிறார். இந்த நடிகர்கள் பட்டாளத்தோடு, இப்போது நடிகர் சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். இந்தத் தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்பு, ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ‘ஹலமதி ஹபிபோ...’ என்ற பாடலை எழுதி ஹிட் கொடுத்தார் சிவகார்த்திகேயன். விஜயின் தீவிர ரசிகரான இவர் சினிமாவில் விஜய் வழியிலேயே கமர்ஷியல் படங்கள் நடித்து ஃபேமிலி ஆடியன்ஸ் மற்றும் குழந்தைகளை ரசிகர்களாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் தனது பிறந்தநாளின்போது கூட, விஜய் பாணியில் அரசியல் மாநாடு போல ரசிகர்களை சந்தித்து மாஸ் காட்டினார் சிவகார்த்திகேயன்.

விஜய்- சிவகார்த்திகேயன்
விஜய்- சிவகார்த்திகேயன்

தொகுப்பாளராக சிவகார்த்திகேயன் இருந்த சமயத்தில் இருந்தே விஜய்க்கு அவர் மீது தனிப்பட்ட பிரியம் உண்டு. இதனால், விஜயுடன் ‘GOAT' கிளைமாக்ஸில் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறாரா என்பதை படக்குழு சீக்கிரம் உறுதி செய்ய வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in