கென்யாவில் ஒலித்த ’கிளிமாஞ்சாரோ’... பாடகி சின்மயி வெளியிட்ட அசத்தல் வீடியோ!

கென்யாவில் ஒலித்த ’கிளிமாஞ்சாரோ’... பாடகி சின்மயி வெளியிட்ட அசத்தல் வீடியோ!

கென்யா மாசாய் பழங்குடி மக்களுடன் இணைந்து பாடகி சின்மயி பாடிய ’கிளிமாஞ்சாரோ’ பாடல் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் அந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

2010-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான ‘எந்திரன்’ திரைப்படம் மிக பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்டது. அதிநவீன டெக்னலாஜி பயன்படுத்தப்பட்டு இப்படம் தயாரிக்கப்பட்டது. இப்படத்தில் வரும் ’கிளிமஞ்சாரோ’ பாடல் பெரும் பொருட்செலவில் படமாக்கப்பட்டது. இப்பாடலை சுமார் 4 கோடி ரூபாய் செலவில் ஷூட் செய்ததாக அப்போதே தகவல்கள் வெளியாகின.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையில் இந்தப் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக, இந்தப் பாடலைப்பாடிய பாடகி சின்மயியை ரஜினி ரசிகர்கள் கொண்டாடினார்கள். எல்லா இடங்களிலும் இந்தப் பாடல் ஒலித்தது. இந்த நிலையில், இசை நிகழ்ச்சிக்காக கென்யா சென்றுள்ள பாடகி சின்மயி, அங்குள்ள மாசாய் பழங்குடி மக்களுடன் இணைந்து இந்தப் பாடலை பாடி ஆடியுள்ளார். அது தொடர்பான வீடியோவை சின்மயி தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in