சீரியல் காட்சியால் வந்த பிரச்சினை... போலீஸூக்கு அபராதம் கட்டிய பிக் பாஸ் நடிகை!

வைஷ்ணவி கெளடா
வைஷ்ணவி கெளடா

சீரியல் காட்சி ஒன்றில் ஹெல்மெட் போடாமல் நடித்ததற்காக சின்னத்திரை நடிகை வைஷ்ணவி கவுடா மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

'சீதா ராமா’ உள்ளிட்டப் பல கன்னட தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை வைஷ்ணவி கவுடா. இவர் பிக் பாஸ் கன்னடாவின் எட்டாவது சீசனிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டார். இந்த நிலையில், இவர் தனது டிவி சீரியலில் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக காவல்துறை அபராதம் விதித்தது.

வைஷ்ணவி கெளடா
வைஷ்ணவி கெளடா

’சீதா ராமா’ சீரியலின் 14வது எபிசோட்டில் வரும் காட்சியைப் பார்த்த கர்நாடக மாநிலம், மங்களூரை சேர்ந்த ஜெயபிரகாஷ் எக்கூர் என்ற பார்வையாளர் புகார் செய்ததை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அதாவது, அந்தக் காட்சியில் வைஷ்ணவியின் கதாபாத்திரம் ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்வது தெரிந்தது.

இது சமூகத்திற்கு தவறான முன்மாதிரி என்று அந்தப் புகாரில் ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார். மங்களூரு போலீஸ் கமிஷனரிடம் கொடுக்கப்பட்ட இந்தப் புகாரில் சம்பந்தப்பட்ட நடிகை, இயக்குநர் மற்றும் சேனல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இதனைப் பார்த்த கமிஷனர் மங்களூரு டிராஃபிக் ஈஸ்ட் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்.

வைஷ்ணவி கெளடா
வைஷ்ணவி கெளடா

விசாரணையில், பெங்களூரில் உள்ள நந்தினி லேஅவுட்டில் இந்த காட்சி படமாக்கப்பட்டது தெரிய வந்தது. மே 10-ம் தேதி, ராஜாஜிநகர் காவல் நிலையம், காட்சியில் நடித்த நடிகை வைஷ்ணவி மற்றும் வாகனத்தின் உரிமையாளருக்கு தலா ரூ.500 அபராதம் விதித்துள்ளது. இனிமேல், போக்குவரத்து விதிகளை மீறமாட்டோம் எனவும் சீரியல் குழு உறுதி கொடுத்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in