பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ‘ஆர்ஆர்ஆர்’ ஹீரோ... வெளியான பலே பிளான்!

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.

'ஆர்.ஆர்.ஆர்.’ நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். பாலிவுட் படங்கள் அதிகம் நடிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காக சீக்கிரமே மும்பையிலும் அவர் செட்டில் ஆக உள்ளார்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரக்கூடிய ஜுனியர் என்.டி.ஆர். 'ஆர்.ஆர்.ஆர்.’ படம் மூலம் பான் இந்திய ரசிகர்களுக்கும் பரிச்சியமானார். இப்போது தெலுங்கு சினிமா மட்டுமல்லாது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் இவர். இதன் முதற்கட்டமாக, ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் உருவாகும் ‘வார்2’ படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

'வார்2’
'வார்2’

இதில் இவரது போர்ஷனுக்கான படப்பிடிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக மும்பை சென்றவரின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இப்படி இருக்கையில், இனி அதிகம் பாலிவுட் படங்களில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறாராம் ஜுனியர் என்.டி.ஆர்.

தன்னுடைய இந்தி படங்களை மேனேஜ் செய்வதற்காக, மும்பையில் உள்ள டாப் ஏஜென்சி ஒன்றுடன் டை-அப் வைத்திருக்கிறார். மேலும், மும்பையில் குடியேற வீடு ஒன்றையும் பார்த்து வருவதாக சொல்கிறார்கள்.

நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.
நடிகர் ஜூனியர் என்.டி.ஆர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in