ரூ. 22,000 மதிப்புள்ள ஷூவை ரசிகருக்கு பரிசளித்த நடிகர்... கேலி செய்யும் நெட்டிசன்கள்!

ரசிகருடன் நடிகர் ஜான் ஆபிரகாம்
ரசிகருடன் நடிகர் ஜான் ஆபிரகாம்

தனது ரசிகர் ஒருவரின் பிறந்தநாளுக்கு ரூ. 22 ஆயிரம் மதிப்புள்ள ஷூவை பரிசளித்ததோடு ஷூ லேஸ் கட்டியும் விட்டிருக்கிறார் பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை கேலி செய்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் பைக் பிரியர் என்பது அவரது ரசிகர்கள் அறிந்த விஷயமே! அண்மையில், பைக் ரைடிங்கில் ஆர்வம் கொண்ட அவரது ரசிகர் அக்‌ஷய்க்கு பிறந்த நாள். அப்போது ஜான் ஆபிரகாம் செய்த காரியம் நெட்டிசன்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும் சிலர் கேலியும் செய்து வருகின்றனர்.

அதாவது ஜான் தனது ரசிகர் அக்‌ஷய்-க்கு ஒரு ஜோடி ஹை-எண்ட் ஃபார்மா பைக்கிங் ஷூக்களை பிறந்தநாள் பரிசாக வழங்கி யுள்ளார். மேலும், அந்த ரசிகருக்கு கேக் வெட்டி ஊட்டியவர் அவரின் ஷூ லேசையும் கட்டி விட்டுள்ளார். இந்த ஷூவின் விலை சுமார் ரூ. 22,500. இந்தப் பரிசை பெற்றுக்கொண்ட அக்‌ஷய் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜானின் இந்த செயலால் நெகிழ்ந்துபோன அக்‌ஷய், ஜானை சந்தித்து அவர் கையால் பரிசு வாங்க வேண்டும் என்ற தனது வாழ்நாள் கனவு நிறைவேறி விட்டது எனக் கூறியுள்ளார். மேலும், “ஜான் எனக்கு ப்ரீமியம் இத்தாலியன் ரைடிங் ஷூவை பரிசளித்துள்ளார். என்னிடம் மிகவும் அன்பாக நடந்து கொண்டார்” என ஷூ புகைப்படங்களைப் பகிர்ந்து சொல்லி இருக்கிறார் அக்‌ஷய்.

முன்பு ஒருமுறை தனது ரசிகர்களிடம் கடுமையாக நடந்து கொண்டதற்காக விமர்சிக்கப்பட்டவர் ஜான் ஆபிரகாம். ஆனால், இப்போது அதற்கு எதிர்மாறாக ரசிகருக்கு ஷூ பரிசளித்து ஷூ லேஸ் வரை கட்டியிருப்பது நெட்டிசன்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

‘இதை முன்பே செய்திருந்தால் நல்ல பெயராவது கிடைத்திருக்கும்’ எனவும் ‘கொடுத்து வைத்த ரசிகர்’ எனவும் ஜானை கேலி செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இதையும் வாசிக்கலாமே...

ஜாக்கிரதை... இன்று அக்னி நட்சத்திரம் தொடக்கம்... 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்!

தேனியில் யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடியாக கைது... பெண் காவலர்கள் குறித்த அவதூறு பேசியதாக வழக்கு!

மாடியிலிருந்து வீசி எறிந்து பச்சிளம் குழந்தை கொலை... தாய் உள்ளிட்ட மூவர் கைது!

200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த சுற்றுலா வேன்... சிறுமி பலி.. 30 பேர் படுகாயம்!

கேரள ராணுவ அதிகாரியின் மகன் பெங்களூருவில் கடத்தல்... பணத்திற்காக நண்பர்கள் போட்ட பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in