சூர்யா, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர்... தெற்கே அகலக் கால் பதிக்கும் ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் தெற்கில் எப்போது நடிப்பார் என்ற தென்னக ரசிகர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பை, தனது அடுத்தடுத்த படங்களின் வழியாக தற்போது அவர் தீர்த்து வருகிறார்.

தெற்கிலிருந்து வடக்கே சென்று பாலிவுட்டில் தடம் பதித்தவர் நடிகை ஸ்ரீதேவி. தயாரிப்பாளர் போனி கபூரை மணந்த ஸ்ரீதேவி, அங்கேயே செட்டிலாகிப் போனார். அவரது அகால மரணத்தை அடுத்து, ஸ்ரீதேவியின் ரசிகர்களுக்கு அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் தனது தொடர் திரைப் பிரவேசத்தால் ஆறுதல் தந்து வருகிறார்.

 தங்கள் மகள்களுடன் 
ஸ்ரீதேவி - போனிகபூர் தம்பதி
தங்கள் மகள்களுடன் ஸ்ரீதேவி - போனிகபூர் தம்பதி

ஆனபோதும், ஸ்ரீதேவியை ஆளாக்கிய தெற்கு படவுலகம் மயிலு ஸ்ரீதேவி மகள் ஜான்விக்காக காத்திருந்தது. முக்கியமாக, போனி கபூர் தயாரிப்பிலான தென்னிந்திய திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம், அதில் ஜான்வி நடிக்கிறாரா என போனியை கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

குறிப்பாக அஜித் குமாரின் அடுத்தடுத்த படங்களை போனி கபூர் தயாரித்தபோது, தல ஜோடியாக ஜான்வி வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் கோரிக்கையாக இருந்தது. இதனிடையே தனது முதல் தென்னிந்திய பிரவேசத்தை அறிவித்த ஜான்வி கபூர், இந்த ஆண்டில் மேலும் இரு தென்னிந்திய நட்சத்திரங்களுடன் ஜோடி கட்டும் தகவலும் வெளியாகி இருக்கிறது.

ஜூனியர் என்டிஆர் ஜோடியாக அவரது 30வது திரைப்படத்தில் ஜான்வி கபூர் ஜோடி கட்டுகிறார். கொரட்டல சிவா இயக்கத்திலான இந்த திரைப்படத்தில் ஜான்வி கபூரின் பிரவேசம் அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜூனியர் என்டிஆர் திரைப்படத்தில் ஜான்வி
ஜூனியர் என்டிஆர் திரைப்படத்தில் ஜான்வி

இதற்கு அடுத்தபடியாக ராம் சரண் ஜோடியாக அவரது 16வது திரைப்படத்தில் ஜான்வி ஜோடி சேர்கிறார். புச்சி பாபு இதனை இயக்குகிறார். இந்த 2 திரைப்படங்களும் தெலுங்குக்கு அப்பால், பான் இந்தியா திரைப்படமாக உருவாகின்றன.

மூன்றாவதாக தமிழின் சூர்யா சிவக்குமாருடன் ஜான்வி கபூர் இணைகிறார். ’கர்ணா’ என்ற திரைப்படம் இந்தியில் பான் இந்தியா படைப்பாக உருவாகிறது. மகாபாரதக் கதையை தழுவி உருவாகும் இந்தப் படத்தில் திரவுபதி வேடத்தில் ஜான்வி நடிக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா... தேர்தல் விளம்பரத்திற்கு ஒரே வருடத்தில் ரூ.432 கோடி செலவழித்த பாஜக!

ஆபரேஷன் தியேட்டரில் ப்ரீ-வெட்டிங் ஷூட்... அரசு மருத்துவர் டிஸ்மிஸ்!

ஹரிஹரனின் இசைக் கச்சேரியில் குளறுபடி... கூட்ட நெரிசலில் சிக்கி பலர் காயம்!

நடிகர் மிதுன் சக்கரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி!

அட கொடுமையே... மருத்துவமனையில் நோயாளிகள் முன்பாக நடனமாடி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட மாணவர்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in