`தளபதி 68’ படத்தின் கதை அந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா... வைரல் தகவல்!

‘தளபதி 68’ பட பூஜையில் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் விஜய்
‘தளபதி 68’ பட பூஜையில் இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் விஜய்

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரக்கூடிய ‘தளபதி 68’ படம் ஒரு ஹாலிவுட் படத்தின் காப்பி என்ற தகவல் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.

தளபதி 68
தளபதி 68

வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 68’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். நடிகர்கள் மீனாட்சி, சிநேகா, லைலா, மோகன், பிரபுதேவா, ஜெயராம் என பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். சென்னையில் நடந்த முதல் கட்டப் படப்பிடிப்பில் மாஸான ஆக்‌ஷன் காட்சிகளும் நடனக்காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடந்தது. இந்த நிலையில், டீஏஜிங் டெக்னாலஜியைப் பயன்படுத்தி நடிகர் விஜய்க்கு இரட்டை வேடம் என்ற தகவலும் வெளியானது.

’லூப்பர்’ படத்தின் கதை
’லூப்பர்’ படத்தின் கதை

’லியோ’ படத்தின் வெற்றி விழாவை முடித்துவிட்டு நடிகர் விஜய் தாய்லாந்து கிளம்பினார். இப்போது அங்கு அவரது போர்ஷனுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட இன்று சென்னை திரும்பினார் விஜய். அந்த வீடியோவும் இணையத்தில் வைரலானது.

மீதமுள்ள நடிகர்களுக்கான போர்ஷனை முடித்துவிட்டு படக்குழுவும் விரைவில் சென்னை திரும்பும். இந்த நிலையில், இன்று காலை முதல் இணையத்தில் ‘தளபதி 68’ படத்தின் கதை ஹாலிவுட்டில் கடந்த 2012ம் ஆண்டு வெளிவந்த ’லூப்பர்’ படம் போன்ற கதைக்களம் தான் ’தளபதி 68’ எனக் கூறப்பட்டு வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in