கேன்ஸ் திரைப்பட விழா... இந்தியாவிலிருந்து தேர்வான முதல் கேம்-ஆக்‌ஷன் திரைப்படம்!

'இருவம்’
'இருவம்’

உலகின் மிகப் பெரும் திரைப்பட விழாவான கேன்ஸ் விழாவில் அதிகாரபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியாவின் முதல் லைவ் ஆக்‌ஷன் கேம்/ திரைப்படமாக ‘இருவம்’ உள்ளது.

உலக சினிமா ஆர்வலர்கள் உற்று நோக்கும் ஒரு விழாவாக கேன்ஸ் திரைப்பட விழா இருக்கிறது. இந்த வருடம் மே 15 முதல் 25 ஆம் தேதி வரை பிரான்ஸ் நாட்டில் நடைபெறவிருக்கிறது கேன்ஸ் சர்வதேசத் திரைப்பட விழா.

140 நாடுகளிலிருந்து திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், இன்னபிற திரைப்பட ஆளுமைகள் பங்கெடுக்கும் மாபெரும் நிகழ்வில் ‘லெட்ஸ் ஸ்பூக் கேன்ஸ் (Let’s Spook Cannes)’ என்கிற தலைப்பின் கீழ் ஒரு தமிழ் படைப்பு தேர்வாகி இருக்கிறது.

'இருவம்’
'இருவம்’

இந்நிகழ்வின் நோக்கம் கேமிங் மற்றும் திரைப்படத் தயாரிப்பிற்கு உதவும் வகையில் உலகம் முழுவதிலுமிருந்து பரிந்துரைக்கப்படும் பல்வேறு வீடியோ கேம்களில் சிறந்த படைப்புகளைத் தேர்வுசெய்து காட்சிப்படுத்துவது. இந்திய சினிமா மற்றும் கேமிங் இரண்டையும் இணைக்கும் வகையில் புதுபடைப்பாக, 'இருவம்' திரைப்படம் உருவாகி இருக்கிறது. இதுதான், கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவின் 'லெட்ஸ் ஸ்பூக் கேன்ஸ்' நிகழ்வுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு அல்லது சினிமா என்ற குறுகிய அளவில் நின்றுவிடாமல், பார்வையாளர்களையும் சினிமாவிற்குள் பங்கெடுக்க வைக்கும் விதமாக உருவாகியுள்ள ’இருவம்’ இந்தியாவின் முதல் FMV (Full Motion Videos) கேம். அதாவது, ‘இருவம்’ படைப்பில் இடம்பெற்றுள்ள கதை மாந்தர்களின் முடிவுகளை பார்வையாளர்களே தேர்ந்தெடுக்கலாம். அம்மக்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் திரையில் பிரதிபலிக்கும்.

நடிகை வர்ஷா பொல்லம்மா
நடிகை வர்ஷா பொல்லம்மா

இக்கதையின் முடிவைத் தீர்மானிக்கப் போவதும் அவர்கள் தான். ஆக இதில் பார்வையாளர்களும் படைப்பாளிகள். இந்த புதுவித அனுபவத்தைத் தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் உலகம் முழுக்க இருக்கிற ரசிகர்களுக்கும் கொண்டுசேர்க்கும் விதமாக தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இப்படைப்பு உருவாகியிருக்கிறது.

‘கெட் ஹேப்பி' என்ற ஆங்கிலத் திரைப்படத்தை இயக்கிய மனோஜ் அண்ணாதுரை இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகை வர்ஷா பொல்லம்மா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுகுறித்தான மற்ற அதிகாரப்பூர்வ விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

இதையும் வாசிக்கலாமே...

கைவிரித்த லைக்கா... அஜித்தின் ‘விடாமுயற்சி’ அவ்வளவுதானா?

20 வருஷ கனவு... மொத்தமாக மாற போகுது கோவை... தயாராகுது புது திட்டம்!

ஏர் இந்தியா ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்... நாடு முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு!

அனுபவம் பத்தாது... அரசியல் வாரிசாக அறிவித்தவரை அதிரடியாக நீக்கிய மாயாவதி

பரபரப்பு... பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in