'இந்தியன்2’ ரிலீஸில் மீண்டும் சிக்கல்... உற்சாகத்தில் தனுஷ்!

கமல்- தனுஷ்
கமல்- தனுஷ்
Updated on
2 min read

‘இந்தியன்2’ படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘இந்தியன் 2’ ரிலீஸ் தாமதத்தால் நடிகர் தனுஷ் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இயக்குநர் ஷங்கர்- கமல் இருவரும் பல வருடங்களுக்கு பிறகு ‘இந்தியன்2’ படத்தில் ஒன்றிணைந்தனர். படம் துவங்கியதில் இருந்தே அடுத்தடுத்து சர்ச்சைகளும் தொடர்ந்தன. படக்குழுவினருக்குள் பிரச்சினை, படப்பிடிப்புத் தளத்தில் விபத்து, உயிர்பலி, கொரோனா கால தாமதம், நீ..ண்டு கொண்டே போன படத்தின் பட்ஜெட், நடிகர்களின் கால்ஷீட், நடிகர்கள் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு, மாரிமுத்து என அடுத்தடுத்து உயிரிழந்த நடிகர்கள் என ‘இந்தியன்2’ படத்தின் படப்பிடிப்பு விக்கிரமாதித்யன் கதையாக நீண்ட நிலையில், பெரும் போராட்டத்திற்கு பின்னர், படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் எனவும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

 ’இந்தியன்2’
’இந்தியன்2’

இந்நிலையில், ‘இந்தியன்2’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் எதிர்பார்த்த நேர்த்தியுடன் நிறைவடையாததால், ஜூன் மாதம் ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், பட வெளியீட்டை ஜூலை மாதம் தள்ளி வைக்க பேசி வருகிறார்களாம்.

அதே நேரத்தில், கமலின் ‘இந்தியன்2’ படத்துடன் போட்டி போட வேண்டாம் என்ற எண்ணத்துடன் ஜூன் மாதம் வெளியாக இருந்த தனுஷின் ‘ராயன்’ பட வெளியீட்டை ஜூலை மாதம் தள்ளி வைத்தார்கள். இப்போது ‘இந்தியன்2’ ரிலீஸ் தள்ளிப் போவதால், ‘ராயன்’ படத்தை முன்னதாக வெளியிட படக்குழுவினர் வேலைப் பார்த்து வருகிறார்கள்.

’ராயன்’ தனுஷ்
’ராயன்’ தனுஷ்

இந்தியன் -2 ரிலீஸ் தள்ளிப் போவது நடிகர் தனுஷ் ரசிகர்களை மட்டுமல்லாமல் தனுஷையும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஏனெனில், இந்த வருடம் பொங்கல் வெளியீடாக ரிலீஸான தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை. தன்னுடைய இயக்கத்தில் வெளியாகும் ‘ராயன்’ படத்தை ஹிட்டாக்குவதில் தனுஷும் ரொம்பவே ஆர்வமாக இருக்கிறார். விரைவில் ‘ராயன்’ பட ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...

கோவிஷீல்டு களேபரங்கள்... உயிர்காக்கும் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் பயமுறுத்தக் கூடியதா?

அயோத்தி கோயிலில் மீண்டும் மோடி.... தேர்தல் வெற்றிக்காக சிறப்பு வழிபாடு!

ஹாலிவுட்டில் சோகம்... டைட்டானிக் பட நடிகர் திடீர் மரணம்!

இன்று முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்!

இன்று ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in